All about Paleo Diet

Post Top Ad

Showing posts with label Paleo. Show all posts
Showing posts with label Paleo. Show all posts

Tuesday, 14 February 2017

23:17

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் கொழுப்பும்

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் கொழுப்பும்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம்,
இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .

இத்தகைய கொடிய ஒரு நோய்
நம்மிடையே முன்னிலும் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

காரணம் ???

சூழலியல் மாற்றம்(environmental changes)
மரபு வழியாக வருகிறது ( hereditary )ஆகிய இரு காரணங்கள் கூறப்படுகிறது.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த இரு காரணங்களையும் தான்.

மனித இனம் தோன்றிய 26 லட்சம் வருடங்களில் இல்லாத ஜீன் எனும் மரபணு மாற்றங்கள் கடந்த 10,000 வருடங்களாக ஏற்பட்டு, அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக மிக வேகமாக ஏற்படுவதற்கு காரணம் என்ன???

சூழலியல் மாற்றம் என்றால் என்ன??

சூழலியலில் நாம் செய்த மிகப்பெரிய மாற்றங்களில்

நாம் தினமும் மூன்று வேலை உண்ணும் உணவு தான் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆக, தேவையற்ற முறையில் உணவு முறைகளை  மாற்றி நாம் தான் உறங்கிக்கொண்டிருந்த கெட்ட ஜீன்களை எழுப்பிவிட்டோம்.

அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறோம்.

மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசனை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும்.

Arthritis என்றால் மூட்டுகளில் ஏற்படும் இன்ப்லமேசன் ஆகும்.

இந்த இன்ப்லமேசன் ஏன் ஏற்படுகிறது??

வரலாற்றில் எங்கேனும் ஒரு சூழலிலாவது "ட்ரேன்ஸ் ஃபேட்" (transfat) எனும் கொடிய நஞ்சை நமது முன்னோர்கள் உண்டார்கள் என்ற சான்று உள்ளதா??

ட்ரேன்ஸ் ஃபேட் என்றால் என்ன??

நாம் உண்ணும் ஒவ்வொரு பொறித்த உணவிலும் இருப்பது இந்த ட்ரேன்ஸ் ஃபேட் தான் . இவை நமக்கு செய்யும் ஊறுகள் ஒன்றல்ல இரண்டல்ல.

எண்ணெயின் கொதிக்கும் திறனை அதிகரிக்க , அவைகளின் மீது "ஹைட்ரஜனேற்றம்"(hydrogenation) எனும் வேதியியல் மாற்றம் செய்து நல்ல கொழுப்பை "ட்ரான்ஸ் ஃபேட்" ஆக மாற்றிவிட்டோம்.

இந்த ட்ரேன்ஸ் ஃபேட் நமது குடலில் பங்கத்தை ஏற்படுத்துகிறது.
இது "leaky gut syndrome" எனும் பிரச்சனையை வரவழைக்கிறது.

பாதிப்புக்குள்ளான குடலில் நாம் உண்ணும் உணவில் இருந்து உட்கொள்ளப்படும் அனைத்து சத்துகளும் ரத்தத்தில் கலக்கும்.

பொதுவாக , நல்ல நிலையில் இருக்கும் குடலுக்கு , தேவையான சத்துகளை மட்டும் உறிஞ்சி தேவையற்ற சத்துகளை வெளியேற்றும் சக்தி உண்டு.

ஆனால் லீக்கி கட் பிரச்சனை இருக்கும் குடலுக்கு , எதை உட்கொண்டு எதை விட வேண்டும் என்று தெரியாது. ஆக, அனைத்து சத்துகளையும் ரத்தத்தில் கலக்க விடும்.

இதனால், நமது எதிர்ப்பு சக்தியானது தடம்புரண்டு, நமது மூட்டுகளை அழிக்கும்.

மேலும் , தானியங்களை பிரதானமாக உண்ணும் ஒருவருக்கு

உடலில் பல இடங்களில் இன்ஃப்லமேசன் தோன்ற வாய்ப்புண்டு.

காரணம்.

மாவுச்சத்தை பிரதான எரிபொருளாக நமது செல்கள் உட்கொள்ளும்போது ,
நமது செல்களில் "free radicals" எனும் கழிவுகள் தோன்றும்.

இந்த free radicals நமது உடலுக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவை.

எனவே, காலை மதியம் இரவு மூன்று வேலையும் இட்லி தோசை சாதம் என்று உண்டால் அது மேலும் மூட்டு வாதத்தை அதிகப்படுத்தும்.

பொதுவாக , ஒருவருக்கு மூட்டு வாதம் இருப்பது ,

அவர்கள் கூறும் நோய் அறிகுறிகளை வைத்தே மூட்டு வாதம் வந்ததை அறியலாம்

கணுக்கை, விரல்கள்,முழங்கை, முழங்கால் என்று அனைத்து மூட்டுகளிலும் புண் ஏற்பட்டு வலி தரும்.

ரத்த பரிசோதனை செய்தால்,
ரியுமடாய்ட் ஃபேக்டர் எனும் காரணி இருக்கலாம்.

நோயின் ஆரம்பத்தில், ரத்தத்தில் தென்படாமல் போகப்போக தென்படலாம்.

Erythrocyte sedementation rate எனும் ரத்த சிவப்பணுக்கள் படியும் தன்மை மிக அதிகமாகும்.

C-reactive proteins எனும் இன்ப்லமேசனை குறிக்கும் காரணி மிக மிக அதிகமாக இருக்கும்

ஆண்ட்டி நியூக்ளியர் ஆண்டிபாடிகளும் ரத்தத்தில் அதிகம் இருக்கலாம்.

இத்தகைய மூட்டு வாதத்திற்கு , தற்போது இருக்கும் சிகிச்சைகள்

மூட்டு வலியை குணப்படுத்தும் வலி நிவாரணிகள் மற்றும் நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள் என்று அழைக்கப்படும் disease modifying anti rheumatoid drugs (DMARDs) கொடுக்கப்படும்.

இவை மூட்டு வாதத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

ஒருவர் மூட்டுவாதத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு கூட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மூட்டு வாதம் தரும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்

மூட்டு வாதம் இருப்பவர்கள்

1. தானியங்கள், சிறு தானியங்களை தவிர்க்க வேண்டும்

2. க்ளூடன் கொண்ட கோதுமையை அறவே ஒதுக்க வேண்டும்.

3. முடிந்தவரை இயற்கை வழியில் விளைந்த ஆர்கானிக் காய்கறிகளை உண்ணலாம் .

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டு கறி , ஈரல் , ஆட்டுகால் சூப் போன்றவற்றை உண்ண வேண்டும்

5. பசு மஞ்சள், மிளகு, துளசி , பூண்டு, சிறு வெங்காயம் போன்றவற்றை சேர்த்தால் இன்ப்லமேசன் குறையும்

6. பாமாயில், சஃபோலா , சன் பிளவர் ஆயில், வனஸ்பதி போன்ற செயற்கை எண்ணெய்களை நிறுத்த வேண்டும் .

7. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

8. எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை உணவில் செய்வதன் மூலம்
மூட்டு வாதத்தின் தீவிரத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Dr.farook Abdulla

08:03

ஏன் சிலருக்கு என்ன சாப்பிட்டும் ஒன்றுமே ஆகவில்லை? நமக்கு மட்டும் இவ்வளவு பிரச்சினை?

ஏன் சிலருக்கு என்ன சாப்பிட்டும் ஒன்றுமே ஆகவில்லை? நமக்கு மட்டும் இவ்வளவு பிரச்சினை?
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
பல ஒல்லி பெல்லி ஆசாமிகள் மூன்று வேளையும் சதம், சப்பாத்தி, பர்கர், தோசை என  ஃபுல் கட்டு கட்டுகிறார்கள். எவ்வளவு செய்தும் அவர்கள் வெயிட் கூடுவதில்லை, ஒல்லியாக ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்கள் மரபணு அப்படி.எவ்வளவு மாவுச்சத்து சாப்பிட்டாலும் இன்சுலின் அதிகரித்து அவற்றை டிஸ்போஸ் செய்கின்றன. அவர்கள் செல்கள், இன்சுலின் எதிர்ப்பு நிலை அடைவதில்லை

நம்மில் பெருவாரியான மக்கள் அப்படி இல்லை. நமக்கு அதிக மாவுச்சத்து (இட்லி/தோசை, சாதம், சப்பாத்தி) எடுத்தால் இன்சுலின் அதிகரித்து உடற்பருமன், பிரஷர், சுகர் என பல வியாதிகள் வருகிறது.

இந்த ஒல்லிபெல்லி ஆசாமிகள் விவரம் தெரியாமல் தாங்கள் எடுக்கும் உணவு தங்களைக் காக்கிறது என நினைக்கிறார்கள்(உண்மையில் அவர்கள் மரபணு அவர்களைக் காக்கிறது). அதனால் இட்லி, தோசை, சப்பாத்தி, ரைஸ் அனைவருக்கும் நல்லது என நினைக்கிறார்கள். யாராவது அதை சாப்பிட்டு குண்டானாலோ அல்லது சுகர் வந்தாலோ, "நீ சோம்பேறி, நல்லா சாப்ட்டு தூங்குற. வாக்கிங் போ" என்கிறார்கள். குண்டுபெல்லி மற்றும் சுகர் ஆசாமிகள் வாக்கிங் ஜாகிங் போயும் உடற்பருமனோ சுகரோ குறைவதில்லை. ஏனென்றால் அவர்கள் பிரச்சினை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ். மாவுச்சத்து அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.   
 
அவர்களுக்கு தீர்வு மாவுச்சத்து குறைந்த பேலியோ டயட்டே.

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாம் ஆரம்ப நிலையிலிருந்து பிறந்து ஓட ஆரம்பிக்கிறோம். இந்த கடவுளின் இன்சுலின் சென்சிடிவ் குழந்தைகள் 80மீட்டர் ஏரியாவிலிருந்து பிறந்து ஓட ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் வெற்றி பெறுவது உறுதி. நாம் வெற்றி பெறவில்லை என்றால் நம்மை ஏசுகிறார்கள்.

இயற்கையாகன ஒல்லி பெல்லி ஆசாமிகளே. நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள். குண்டாக இருக்கும் எங்களுக்கு உங்கள் உணவு தீர்வு கிடையாது.

07:56

கர்ப்பப்பை கட்டி (fibroids) ஏன் எதனால் எப்படி வருகிறது? தடுப்பது எப்படி?

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும்  என்டோமேட்ரியோசிஸ், மார்பக புற்றுநோய்- ஏன் எதனால் எப்படி வருகிறது? தடுப்பது எப்படி?

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

இந்திய புள்ளியியல் விபரம்:

• குழந்தையின்மையால் பாதித்த நான்கு இந்தியப் பெண்களில் ஒருவர் முதல் இருவருக்கு என்டோமேட்ரியோசில் உள்ளது

• ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கு ஒருமுறை இரு இந்தியப்பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது-காரணம்- பைப்ராய்டு கட்டி. 35%இந்திய பெண்களுக்கு இது வரும் (உங்களுக்கு மூன்று பெண்களை தெரியுமானால், அவர்களில் ஒருவருக்கு கண்டிப்பாக வருங்காலத்தில் பைப்ராய்டினால் கர்ப்பப்பையை அகற்றுவார்கள்-இது உறுதி )

• வருடத்திற்கு 1.5லட்சம் இந்திய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது   

பெண்கள் மாதவிடாய் ஆகும் போது ஏற்படும் கழிவு சில சமயம் வெளியேறாமல், கர்ப்பப்பை, பல்லோப்பியன் குழாய், வயிற்றுப்பகுதி போன்ற இடங்களில் தங்கி விட்டால்
என்டோமேட்ரியோசிஸ் எனும் பிரச்சினை வரலாம். அவை கர்ப்பப்பை செல்களை போலவே மகளிர் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டிரோனுக்கு பணிந்து செயலாற்றும். அதனால் மாதவிடாய் முன்னும் பின்னும் வலி வரக் காரணமாகின்றன. இந்த என்டோமேட்ரியோசிஸ் திசு நம் உள்காயத்தை தூண்டி விடுகிறது மற்றும் இம்யூன் சிஸ்டத்தை தூண்டுகிறது. இதனாலேயே இவர்களுக்கு குழந்தை உருவாவதில்லை.

fibroid எனப்படும் கர்ப்பப்பை கட்டியின் திசுக்கள், ஈஸ்ட்ரோஜனுக்கு கட்டுப்படும். அதிக ஈஸ்ட்ரோஜன் இருந்தால் பெரிதாகும்.
சில வகையான மார்பக புற்றுநோய்கள், ஈஸ்ட்ரோஜன் அதிகமானால் வளரக்கூடியவை
அதிகமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை குறைத்து நார்மலாக்கினாலே என்டோமேட்ரியோசிஸ் வராமல் தடுக்கலாம், பைப்ராய்ட் பெரிதாவதை தடுக்கலாம், சில மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 

அதிக ஈஸ்ட்ரோஜன் எப்படி உற்பத்தியாகிறது மற்றும் உற்பத்தியை தடுக்கும் வழிகள்:

1. அதிக இன்சுலின் அளவுகளை குறைத்தல்: மாவுச்சத்து (இட்லி, தோசை, சப்பாத்தி,சாதம் முதலியன) உணவுகள் இரத்தத்தில் க்ளுக்கோஸ் ஆக மாறும்--> இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்--> இன்சுலின் ஆரோமடேஸ் (aromatase) என்சைமை தூண்டும்--> ஆரோமடேஸ் என்சைம், ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டும். அதனால் உணவில் மாவுச்சத்தை குறைக்க வேண்டும் (பேலியோ)

2. உடலில் கொழுப்பு  அதிகம் சேர்ந்தால்-->அடிப்போநெக்டின் ஹார்மோன் உற்பத்தி குறையும்--> இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்--> ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும். அதனால் பேலியோ டயட் மூலம் வெயிட் மற்றும் இன்சுலின் அளவுகளை நார்மல் ஆக்க வேண்டும்

3. ரெகுலர் உணவுகள்--> குண்டாதல்--> கொழுப்பு செல்கள் PGE2 எனும் கெமிக்கலை உற்பத்தி செய்யும்--> PGE2 ஆரோமடேஸ் செயலை அதிகரிக்கும்--> அதிக ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி. அதனால் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்

4. மாவுச்சத்து உணவுகள் மூலம் மேலே சொன்னது போல ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிக்ப்படுத்தினாலே போதும்-->அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகள்--> இன்ப்லமேஷன் எனும் உள்காயத்தை தூண்டும்--> உள்காயம் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஒரு தொடர்கதை ஆகிவிடும்.  அதனால் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்

5. பிளாஸ்டிக் மற்றும் பூச்சிமருந்து பயன்பாடு ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும்

அதிக ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் வழிகள்:

1. உடற்பயிற்சி - இன்சுலின் அளவுகளை குறைத்து நார்மலாக்கி ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்க

2. ஒமேகா 3 உணவுகள் அல்லது மாத்திரை-இன்ப்லமேஷன் எனும் உள்காயத்தை குறைக்க

3. காலிபிளவர், புரோக்கொளி, முட்டைக்கோஸ்-ஈஸ்ட்ரோஜனை ஈரல் மூலம் வெளியேற்ற  

4. கெபிர் தயிர் அல்லது புளித்த காய்கறி (saurkraut, kimchi), கொம்பூச்சா- சிறுகுடல் கிருமிகளை மேம்படுத்தி ஈச்ட்ரோஜனை வெளியேற்ற 

5. கிரின் டி, பூண்டு மற்றும் உணவில் தேவையான புரதம் (பேலியோ)

6. பேலியோ டயட்- இன்சுலின் மற்றும் அடிப்போநெக்டின் வகையறாக்களை சரியான அளவில் வைக்க

மேலே சொன்ன பிரச்சினைகள் வந்தவர்கள் டாக்டரின் மருந்துகளை எடுப்பதுடன் மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் வியாதிகளின் தாக்கம் வெகுவாக குறையலாம்.

Sunday, 12 February 2017

23:01

பேலியோ பற்றி மக்களின் தவறான அணுகுமுறை...

புத்தகக் கண்காட்சி புண்ணியத்தில் திருப்பூர் வாசியாக ஒருவாரம் ஓடிவிட்டது. தொடர்சியாக இங்கே மக்களைச் சந்தித்ததில் பல மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகளையும், மிகவும்  கவலை தரும் செய்திகளையும் கேட்டேன் / கேட்டுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அவற்றினை அனைத்து குழு மக்களுக்கும் அறிவிப்பது என் கடமை.

முதலில் மகிழ்வைத் தரும் செய்திகளில் சில:

குடும்ப சகிதமாக பல மக்களைச் சந்தித்தேன். அதில் பலர் ஏதோ ஒரு காரணம் குடியின் பிடியில் விழுந்து மீள முடியாமல் சிக்கலாக்கிக் கொண்ட வாழ்க்கையிலிருந்து பேலியோ மூலம் சுலபமாக மீண்டிருக்கிறார்கள். குடியிலிருந்து மீண்டவரை விட அவரின் குடும்பத்தினரின் மகிழ்ச்சி சொல்லில் வடிக்க முடியாது. தெளிவாக ரத்தப் பரிசோதனை செய்து, குழுவில் போட்டு உணவு அட்டவணை பெற்று சரியான ஆரோக்கியத்தை அடைந்திருக்கிறார்கள்.

வெகு இளம் வயதில் ஒரு பெண்மணி கிட்டத்தட்ட 400 சொச்சம் இருந்த தன் சர்க்கரை அளவை பேலியோவுக்கான ரத்தப் பரிசோதனை முடிவில் அறிந்துகொண்டு சரியாக உணவினை எடுத்து இன்றைக்கு HbA1C 10 லிருந்து 5 க்கு கொண்டுவந்திருக்கிறார். நல்ல எடை குறைத்து ஆரோக்கியம் மீண்டிருக்கிறார். இந்தப் பரிசோதனை செய்யாவிட்டால் தனக்கு சுகர் இருப்பதே அறியாது பெரும் சிக்கலில் மாட்டி இருப்பேன் என்று அவர் கூறியதும், தெளிவாக இந்த உணவுமுறையை அவர் பின்பற்றுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பலருக்கு சொல்வதறியாது கை குலுக்கி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துச் சென்றார்கள். இதில் குழு சார்பில் நாங்கள் பெருமையடையவோ, கிரீடம் சுமக்கவோ ஒன்றுமே இல்லை என்பதோடு, இது போன்று ஆயிரக்கணக்கில் பார்த்தபடியால் நன்றி சொல்லி கை கூப்பிக் கடக்க முடிந்தது. பேலியோவின் வெற்றிக்கு நாங்கள் சப்போர்ட் மட்டுமே அனைத்து ரிசல்ட்களுக்கும் காரணம் உங்களின் கடுமையான, கட்டுப்பாடான உணவுப்பழக்கமும், அர்ப்பணிப்பும்தான். நாங்கள் வெறும் கருவியே. எக்காலத்திலும் பேலியோ மட்டுமே கதாநாயகன்.

இனி கவலை தரும் விஷயங்கள்:

ஏற்கனவே இதைப்பற்றி நான் சொல்லி இருந்தாலும், இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதி மக்களில் பலர் வாட்ஸப், தெரிந்தவர் சொன்னார் என்ற அளவிலே திலகவதி மதனகோபால் அவர்கள் சொன்னது போல ஒரு பேஷனான பேலியோவை அணுகுகிறார்கள். சொந்த உடல்நலனின் ஆரோக்கியத்திற்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் போலி பேலியோ கன்சல்ட்களிடம் காசைக் கொட்டி கறியும் பாதாமும் சாப்பிட்டு ரத்தப் பரிசோதனை கூட எடுக்காமல் உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ஈரோட்டிலிருந்து வந்த மக்களிடம் இதை அதிகம் பார்த்தேன். பேலியோ கன்சல்டிங்கில் காசு பார்த்த சில அல்பங்கள் ரத்தப் பரிசோதனைக்கு ஆகும் சொற்ப பணத்தையும் பாதாம் விற்றுப் பிழைத்து மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இத்தனைக்கும் மக்கள் இவர்களிடம் அதிக கட்டணம் கொடுத்து தவறான அறிவுரைகளைப் பெறுகிறார்கள். காலை இறைச்சி, மதியம் பாதாம், இரவு இறைச்சி அல்லது முட்டை இவ்வளவுதான் ஈரோடு, திருப்பூர், கோவை போலி கட்டணப் பேலியோ அட்வைஸ் கும்பலின் பேலியோ அறிவுரைகள். எனவே ரத்தப் பரிசோதனை செய்யாமல் காசு கொடுத்து உடலை வீணாக்கிக்கொள்ள விழையும் அன்பர்கள் மேற்கூறியபடி உண்டு இலவசமாக உடலைப் புண்ணாக்கிக்கொள்ளும்படி ஆழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

40 வருடம் தண்ணியடித்து, தம் அடித்து, குப்பை உணவுகள் உண்டு, இதைப் போன்ற பதர்களிடம் காசு கொடுத்து மூன்று வேளையும் கறியும் முட்டையும் தின்றால் உங்களுக்கு சாதாரண மனிதர்களை விட வியாதிகள் அதிகம் வரும்.

ஆக, நாம் குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. பேலியோ துவங்குவதற்கு முன் குழுவில் பரிந்துரைக்கும் முழு ரத்தப் பரிசோதனை அவசியம். அதில் இருக்கும் சிக்கல்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேலியோ ஒத்துவருமா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவரும். அதன்படி உங்களுக்கேற்ற பேலியோ உணவுகளோ அல்லது மருத்துவரைப் பார்க்கவேண்டிய அறிவுரைகளோ கிடைக்கும். இதற்கான வழிகள் இரண்டு.

01. ஆரோக்கியம் நல்வாழ்வு குழு மூலம் இலவசமாக சேவையைப் பெற்றுக்கொள்வது.
02. பேலியோ பற்றி அறிந்த மருத்துவரை அணுகி அவர் கேட்கும் கட்டணம் கொடுத்து அவர் அறிவுரைப்படி பேலியோவைத் தொடர்வது.

மேற்கூறிய இரண்டு தவிர்த்து நீங்கள் திடகாத்திரமான 18 வயதுக் காரராக இருந்தாலும், நோயுற்றவராக இருந்தாலும் பேலியோ பரிந்துரையை யார் செய்தாலும் புறக்கணியுங்கள். அவ்வாறு செய்ய முடியாது என்றால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பேலியோவைக் காரணமாகக் கூறவேண்டாம். அந்தப் பஞ்சாயத்தையும் எங்களிடம் கொண்டுவரவேண்டாம். அதை உங்களுக்குப் பரிந்துரைத்த அந்த போலிகளிடமே வைத்துக்கொள்ளவும். எங்களுக்கு இருக்கும் நேரத்தினை நாங்கள் சொல்வதுபடிக் கேட்டு பரிசோதனை செய்து ஒழுங்காக உணவெடுக்கும் மக்களுக்கு ஒதுக்கி சேவை செய்துவிட்டுப் போகிறோம்.

குழுவில் நியாண்டர் செல்வன் அவர்கள் துவங்கி நீங்கள் யாரிடம் நேரடியாக பேலியோ அறிவுரை வாங்கினாலும் உங்கள் ரிப்போர்ட்களை குழுவில் போட்டு டோக்கன் நம்பர் வாங்கிக்கொள்ளவும். டோக்கன் நம்பர் இல்லாமல் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப் போவதில்லை. இனி கேள்வி கேட்கும்பொழுது உங்கள் டோக்கன் எண்ணையும் குறிப்பிட்டே கேள்வியோ, சந்தேகமோ கேட்கவும். அதற்கும் முன்பாக அதற்கான பதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதா என்பதை குழுவில் உள்ள சர்ச் ஆப்ஷனைப் பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளவும். அது எப்படி என்று தெரியாவிட்டால் பேஸ்புக் தெரிந்த ஒருவரிடம் கற்றுக்கொள்ளவும். முடிந்தவரை குழுவை டெஸ்டாப்பிலோ, லாப்டாப்பிலோ திறந்து படிக்கவும். மொபைலில் பேஸ்புக்கின் பல வசதிகள் இருப்பதில்லை.

ஆக, கொங்கு மக்களுக்கும், வாட்ஸபை நம்பி பேலியோ எடுக்கும் மக்களுக்கும் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றேதான். ஒரு சித்தாந்தத்தை முழுவதும் இலவசமாக திறந்த புத்தகமாகக் கொடுத்தும் அதைப் பற்றி அக்கறையுடன் படித்தறிய நேரமில்லாது போலிகளிடம் உங்கள் ஆரோக்கியத்தை அடகுவைக்க நீங்கள் துணிந்தால் அந்த முட்டாள்தனத்திற்கும், சோம்பேறித்தனத்திற்கும் குழுவும், பேலியோ உணவுமுறையும் எந்தவகையிலும் பொறுபேற்காது என்பதோடு உங்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவறுதலாக அறியாது நீங்கள் இந்தத் தவறைச் செய்திருப்பின் உடனடியாக அவர்களை ரத்தப் பரிசோதனை செய்து முறையான அறிவுரையைப் பெற்றுக்கொள்ள உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தவறாகவும், ஏற்கனவே சுகருக்கு, பிபிக்கு மருந்து மாத்திரைகள் சரியாக எடுக்காமலும், தைராய்டு, சொரியாஸிஸ், ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி போன்ற சிகிச்சை எடுத்த பிரச்னை உடைய அன்பர்களும் குழு மூலமோ, மருத்துவ உதவி மூலமோ மட்டுமே பேலியோ முயற்சிக்கவேண்டும். ஆரோக்கியமாக இருப்பதாக நம்பும் சிக்ஸ் பேக் வைத்த அன்பராக இருந்தாலும் பேலியோவுக்கு முன் பின் ரத்தப் பரிசோதனைகள் அவசியம்.

பரிந்துரைக்கப்படும் உணவு, சப்ளிமென்ட்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் சரியாகப் பின்பற்றுவதும் அவசியம். குழு மற்றும் பேலியோ பற்றி அறிந்த மருத்துவர்கள் தவிர்த்து பேலியோவை வேறு யார் சொன்னாலும் அல்லது நீங்களே சுயமாகவும் முயற்சிக்கவேண்டாம். உங்கள் நலன் கருதி இதைச் சொல்கிறோம் என்பது தவிர்த்து இதில் வேறு எதுவும் இல்லை.

ரிப்போர்ட் போட்டால் க்ரூப்ல டயட் கிடைக்க மாசக்கணக்காகுங்க நம்ம கிட்ட வாங்க சார்ட் தர்றேன் என்பதுதான் இந்தப் போலிகளின் மிக முக்கிய தூண்டில் புத்தகக் கண்காட்சி புண்ணியத்தில் திருப்பூர் வாசியாக ஒருவாரம் ஓடிவிட்டது. தொடர்சியாக இங்கே மக்களைச் சந்தித்ததில் பல மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகளையும், மிகவும்  கவலை தரும் செய்திகளையும் கேட்டேன் / கேட்டுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அவற்றினை அனைத்து குழு மக்களுக்கும் அறிவிப்பது என் கடமை.

ரிப்போர்ட் போட்டால் க்ரூப்ல டயட் கிடைக்க மாசக்கணக்காகுங்க நம்ம கிட்ட வாங்க சார்ட் தர்றேன் என்பதுதான் இந்தப் போலிகளின் மிக முக்கிய தூண்டில் பார்முலா. அவ்வளவு பொறுமை இல்லாதவர்களுக்கும், ஒரு இன்டர்நெட் சென்டரில் 20 ரூபாய் கொடுத்து குழுவில் அப்லோட் செய்ய வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பார்முலா அருமையான ஆரோக்கிய அல்வாவைத் தரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை செய்து பேஸ்புக் பற்றி அறிந்த ஒருவரிடம் கொடுத்து உதவும்படிக் கேட்டாலே வேலை சுலபமாக முடிந்துவிடும். மூன்று நாட்களில் இதைப் பற்றி எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் தகவல்.

இதனை காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸப்பில் ஷேர் செய்து பரவலாக மக்களை சென்றடைய உதவுங்கள்.

நன்றி.. அவ்வளவு பொறுமை இல்லாதவர்களுக்கும், ஒரு இன்டர்நெட் சென்டரில் 20 ரூபாய் கொடுத்து குழுவில் அப்லோட் செய்ய வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பார்முலா அருமையான ஆரோக்கிய அல்வாவைத் தரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை செய்து பேஸ்புக் பற்றி அறிந்த ஒருவரிடம் கொடுத்து உதவும்படிக் கேட்டாலே வேலை சுலபமாக முடிந்துவிடும். மூன்று நாட்களில் இதைப் பற்றி எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் தகவல்.

இதனை காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸப்பில் ஷேர் செய்து பரவலாக மக்களை சென்றடைய உதவுங்கள்.

நன்றி.
திண்டுக்கல் சிவ குமரனின் வாட்சப் பதிவு.

22:19

ஆபத்தானவையா பண்ணைகோழிகள்? ஒரு ஆய்வுக்கட்டுரை

ஆபத்தானவையா பண்ணைகோழிகள்? ஒரு ஆய்வுக்கட்டுரை

பண்ணைகோழிகள் பற்றிய உண்மைகளை அறியும் முயற்சியாக ஒரு தொடர் எழுதுவதாக அறிவித்திருந்தேன். அதன்படி பண்ணைகோழி உரிமையாளர்கள், வெடினரி டாக்டர்கள் ஆகியோருடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். குழு உறுப்பினர்கள் பலரும் இதில் மிக உதவினார்கள்.

இன்று அதன் ஒரு பகுதியாக நம் குழு உறுப்பினரும், நாமக்கல்லில் முட்டை வணிகம் பல ஆண்டுகளாக செய்து வருபவரும் முன்னாள் கோழிப்பண்ணை உரிமையாளருமான முத்தூர் சேகர் அவர்களுடன் உரையாடினேன்.

உரையாடியதில் பண்ணைகோழிகளுக்கு போடபடும் தடுப்பூசிகள் பற்றி கேட்டேன்.

பண்ணைகோழிகளுக்கு 10 வகை தடுப்பூசிகள் போடபடுவதாக கூறினார். இவை மனிதர்களுக்கு போடபடுவது போல வியாதிகளை தடுக்கும் நோக்கிலேயே போடபடுவதாக கூறினார். ஐ.பிடி போன்ற தொற்றுவியாதிகள் கோழிகளுக்கு பரவாமல் இருக்க இந்த வாக்சின்கள் போடபடுகின்றன என கூறினார். இவை போடாமல் இருந்தகாலகட்டத்தில் பறவைகாய்ச்சல் வியாதி வந்து நூற்றுக்கு 80% கோழிகள் வரை பல பண்ணைகளில் இறந்தன என்றும் இவை போடபட்டபின் இப்போது 90% வரை கோழிகள் வியாதிகள் இன்றி தப்புகின்றன எனகூறினார்

கோழிகளுக்கு அளிக்கபடும் உணவு பற்றிகேட்டேன்

மிகதிட்டமிட்ட முறையில், அறிவியல்பூர்வமாக கோழிகளுக்கு உணவு வழங்கபடுவதாக கூறினார். கோழிகளின் கலோரி தேவைகளுக்கு மக்காசோளம், கோதுமை மற்றும் அரிசி தவிடும், புரததேவைக்கு நிலக்கடலைகேக், சோயா கேக், கொழுப்புக்கு சன்பிளவர் ஆயில்கேக் ஆகியவையும் வழஙகபடுவதாகவும், கால்சியத்துக்கு சிப்பிகளின் ஓடுகளில் இருந்து எடுக்கபடும் பவுடர், வைட்டமின் மாத்திரை கலவைகள் ஆகியவை வழங்கபடுவதாகவும் கூறினார்.

மனிதர்கள் பலரின் உணவே இத்தகைய திட்டமிடலுக்கு உட்பட்டவை அல்ல என்பதை நாம் உணரவேண்டும். கோழிகளுக்கு இது மிக சத்தான உனவு. இயற்கையாக நிலத்தில் இருக்கும் புழுக்கள், பூச்சிகள், புற்களை உண்பது இதை விட நிச்சயமாக பெஸ்ட்தான். ஆனால் அது சாத்தியமில்லை எனும் பட்சத்தில் இந்த உணவு மிக திட்டமிட்ட, சரியான உணவாகும். இதை மேம்படுத்த தேங்காய் பவுடர், பிளாக்சீட் பவுடர் ஆகியவற்றை சேர்க்கலாம் தான். ஆனால் அது இறைச்சிவிலையை அதிகபடுத்தும்.

கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடபடுகிறதா என கேட்டதுக்கு அது நிச்சயமாக போடபடுவதில்லை என உறுதியாக கூறினார். நம் குழுவில் ஒரு வெடினரி டாக்டரும் இத்தகவலை முன்பே தெரிவித்திருந்தார். கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடபட்ட்டால் அவை இறந்துவிடும் என்றார் அந்த மருத்துவர்.

கோழிகளுக்கு க்ரோத் புரமோட்டர் எனும் வகை மருந்துகள் வழங்கபடுவதாக கூறினார். க்ரோத் புரமோட்டர் என்றால் என்ன என தேடினேன். அவை பென்சிலின் போன்ர சிலவகை ஆண்டிபயாடிக்குகள். கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கபடுவதால் மனிதருக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக, மிக அரிதே என ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் ஜீரணம் செய்யமுடியாத மருந்துகளே ஆண்டிபயாடிக்குகளாக பயன்படுத்தபடுகின்றன. அவை  இறைச்சிமூலம் நம் உடலில் சேரும் வாய்ப்பு இல்லை. ஆனால் நீன்டநாள் நோக்கில் கோழிகளின் உடலில் உள்ள கிருமிகளை ஆன்டிபயாடிக்குகளுக்கு கட்டுபடாமல் இருக்கும் தன்மை கொண்டவையாக இந்த ஆண்டிபயாடிக்குகள் மாற்றிவிடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டிபயாடிக்குக்ள் தடைசெய்யபட்டுள்லன. ஆனால் கோழிகளை உண்பவ்ருக்கு இதனால் விரைவில் வயதுக்கு வருவது, கான்சர் வருவது எல்லாம் வரும் என்பது மிக தவறான தகவல். நான் விசாரித்தவரை இந்த ஒரு விஷயம் மட்டுமே பண்ணைகோழிகளில் மாற்றம் செய்யபடவேன்டிய விஷயம். ஆனால் இதில் கோழிகளை உண்பவருக்கு பாதிப்புகள் இல்லை. நீண்டநாள் நோக்கில் ரெசிஸ்டண்ட் பாக்டிரியா மூலம் ஆண்டிபயாடிக்குகளுக்கு கட்டுப்படாத வகை நோய்க்கிருமிகள் உருவாகி மனிதரை தாக்கலாம் எனும் சந்தேகம் மட்டும் உள்ளது. நம் அரசு இதை ஆராய்ந்து முறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

நாட்டுகோழிகள், ஏன் வாத்துக்களுக்கு கூட வாக்சின்களும், இவ்வகை உணவுமே வழங்கபடுவதாக நண்பர் கூறினார். ஆக நாட்டுகோழி என்பது ப்ரிரேஞ்ச் கோழி அல்ல. அப்படிபட்ட கோழி வேண்டுமெனில் கிராமங்களில் இயற்கையாக மேயும் கோழியை தேடிபிடித்தே வாங்கவேண்டும். கடைகளில் விற்கும் நாட்டுகோழி முட்டையும், பண்ணைகோழி முட்டைதான்

ஆக இன்றைய உரையாடல் முடிவில் நான் அறிந்த தகவல்கள் இவையே. அடுத்ததாக வெடினரி டாக்டர்களுடன் பேசி மேலதிக தகவல்களுடன் கட்டுரை தொடரை தொடர்கிறேன். அதனால் தைரியமாக பண்ணைகோழிகளை உண்னலாம் என்பதே தற்போதைய நிலையிலான பரிந்துரை

22:10

சி ஆர் பி - high sensitive crp - Crp என்றால் என்ன?

Crp என்றால் என்ன?
C-Reactive Protein என்பதன் சுருக்கமே CRP.
இது எங்கிருந்து வருகிறது?
எப்போதெல்லாம் நமது உடலில் கிருமி தாக்கம் (infection) அல்லது, இன்ப்ளமேஷன் (inflammation) அதாவது உள் காயம் ஏற்படுகிறதோ அப்போது நமது கல்லீரல் மற்றும் வேறு சில செல்கள் சுரக்கும் பல acute phase reactants எனப்படும் புரதங்களில் ஒன்று தான் crp.
இதன் வேலை என்ன?
உடலில் எப்போது என்ன டேமேஜ் நடந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செயல் கூறுகளில் வரும் இடை தரகர் தான் இந்த crp. இது அதிகமாக இரத்தத்தில் இருந்தால், உடலில் ஏதோ கிருமி தாக்கமோ அல்லது உள்காயமோ ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
நார்மலாக இது எவ்வளவு இருக்க வேண்டும்?
3 mg/dl எனும் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும்.
எப்பொழுது  இது அதிகமாகும்?
Crp அதிகம் ஆக பல காரணங்கள் உள்ளன.
Infection - கிருமி தாக்கம். சாதாரண சளி காய்ச்சலில் இருந்து, தொண்டை வலி, சீழ் புண், நிமோனியா என எங்கு கிருமிகள் இருந்தாலும் crp பல மடங்கு உயர்ந்திருக்கும். (கிட்டத்தட்ட 100 mg/dl மேல் உயர்ந்திருக்கும்)
Chronic inflammatory states - நீண்ட கால மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள், ருமாட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ், சொரியாசிஸ், போன்ற ஆட்டோ இம்மியூன் நோய்கள், இருதய வால்வு பிரச்சனைகள், முதலியன. இவற்றில் crp 10 mg/dl மேல் உயர்ந்திருக்கும்.
தீ காயம், எலும்பு முறிவு, போன்ற காயங்கள்.
மாரடைப்பு(myocardial infarction), கணைய பாதிப்பு (pancreatitis), போன்ற உள்ளுறுப்பு பாதிப்புகள்.
தசை சிதைவு.
புற்று நோய்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களிலும் crp குறைந்த பட்சம் 10 mg/dl எனும் அளவிற்கு மேல் உயர்ந்திருக்கும்.
High sensitive CRP என்றால் என்ன?
சாதாரண crp பரிசோதனையில் 6 mg எனும் அளவிற்கு கீழ் crp இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. எனவே குறைந்த அளவு இருந்தாலும் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை பெயர் தான் high sensitive crp. இது அதே crp தான். டெஸ்ட் தான் வேறு.
இது எங்கு அதிகம் ஆகும்?
மேலே கூறிய அனைத்து தொந்தரவுகளிலும் hscrp அதிகம் ஆகும்.
அத்துடன்,
புகை பிடிக்கும் பழக்கம்.
உடல் பருமன்.
மெட்டபாலிக் சின்ட்ரோம்
இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்காயம்.
நீரிழிவு நோய்.
இவற்றிலும் hscrp அதிகம் ஆகும்.
ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம்.
இந்த பிரச்சனைகளில் எப்போதும் hscrp 10 mg மேல் ஏறாது.
Hscrp 10 mg மேல் இருந்தாலே அவற்றிற்கு காரணம், இருதய நோயோ உடல் பருமனோ அல்ல,
மேலே கூறிய கிருமி தாக்கம், மூட்டு வலி, ஆட்டோ இம்மயூன் போன்றவைகளே.
இதை மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரிப்போர்ட் பார்த்து ஹார்ட் அட்டாக் தான் வரும்.
அவன் crp 3 mg மேலே இருந்தாலே high ரிஸ்க் என்று கொடுத்திருக்கிறான்.
>10 mg என்றால் கதை முடிந்தது என்று அர்த்தம் இல்லை.
வேறு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
அல்லது சளி காய்ச்சல் போன்றவைகளால் crp அதிகம் ஆனதா என்று தெரிந்து கொள்ள hscrp பரிசோதனையை 3 வாரம் விட்டு திரும்ப எடுக்க வேண்டும்.
நம் குழு அன்பர் ஒருவரது குழந்தைக்கு சிறுநீர் infection உள்ளது என்றும் அதனால் crp அதிகம் ஆகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆன்டிபயாடிக் மருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த அன்பர் என்னிடம் கேட்கிறார், பசு மஞ்சள் சாப்பிட்டால் crp குறைந்து விடுமா என்று!!
சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றால் இப்படி தான் ஆகும்.
Crp குறைய என்ன செய்ய வேண்டும்?
நல்ல உணவுமுறை. நம் பேலியோ உணவுமுறை போன்று இயற்கையை ஒன்றி அமைந்த மாவுச்சத்து கம்மி உண்ணும் நல்ல உணவுமுறை hscrp ஐ குறைக்கும்.
உடல் பருமன் குறைத்தல். அதுவும் நம் பேலியோவில் நடக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல். இதுவும் பேலியோவில் நடக்கும்.
புகை, மது விட்டொழிதல்.
மிதமான உடற்பயிற்சி.
பசு மஞ்சள்
கிருமி தாக்கத்தினால் crp அதிகம் ஆனால் அவற்றுக்குரிய மருந்துகள் எடுத்தால் மட்டுமே crp குறையும். நம் உணவுமுறையோ பசு மஞ்சளோ ஒன்றும் செய்யாது.
ஆட்டோ இம்மியூன் நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களில் மருந்துகளுடன் நம் உணவுமுறையும் பசு மஞ்சளும் சேரும்போது பல பயன்களை அளிக்கும்.
பசு மஞ்சளின் வேலை என்ன? ஏன் அது நம் குழுவில் பரிந்துறைக்கப்படுகிறது?
பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது.
அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம், ஆட்டோ இம்மியூன் நோய்கள், osteoarthritis எனும் மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன.

இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன.

Atherosclerosis எனப்படும் இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன.
எனவே தான் நம் குழுவில் crp அதிகம் இருப்பவர்களுக்கு பசு மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏன் பேலியோ எடுக்கும்போது சிலருக்கு hscrp குறைவதில்லை அல்லது ஏறுகிறது?
மேலே கூறியுள்ளது போல பல்வேறு காரணங்களால் hscrp அதிகம் ஆகிறது. உடல் பருமன், இரத்த குழாய் உள்காயம், மெட்டபாலிக் சின்ரோம் ஆகிய காரணங்களால் hscrp அதிகம் ஆகியிருந்தால் மட்டுமே பேலியோவினால் குறையும். வேறு காரணங்கள் என்றால், தகுந்த மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Hscrp நார்மலாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா?
இல்லை. Hscrp ஒரு marker. அவ்வளவே. மேகம் கறுத்து இருந்தால் மழை கட்டாயம் வரும் என அர்த்தம் இல்லை. இல்லை மேகமே இல்லை என்றாலும் மழை வராது எனவும் அர்த்தம் இல்லை. Hscrp போல் ஒவ்வொரு நோய்க்கும் நிறைய marker இருக்கும். அனைத்தையும் வைத்து பார்த்து, பொது உடல் ஆரோக்கியத்தையும் வைத்து பார்த்து மட்டுமே நோய் வரும் வாய்ப்புகளை கூற முடியும்.
சுருக்கமாக சொன்னால், hscrp என்பது தூரத்தில் ஒலிக்கும் சைரன் ஒலி போன்றது. அது போலீஸாகவும் இருக்கலாம், அம்புலன்சாகவும் இருக்கலாம், தீயணைப்பு வண்டியாகவும் இருக்கலாம், பக்கத்து வீட்டு குழந்தை விளையாடும் பொம்மையின் ஒலியாகவும் இருக்கலாம். எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை தெரியும்.
இதுவே hscrp க்கு என் கோனார் உரை.