All about Paleo Diet

Post Top Ad

Showing posts with label diat வெயிட் லாஸ். Show all posts
Showing posts with label diat வெயிட் லாஸ். Show all posts

Sunday, 12 February 2017

22:44

பேலியோவால் உங்களுக்குள் ஒரு பிரமிட் உருவாகிறது..

பேலியோ உங்கள் நோய்களை மற்றுமில்லை, அதை உண்பதால் உங்கள் உடலில் சப் செல் அட்டாமிக் ஸ்பேஸ் சிம்பிள் ஹார்மோனிக் மோசன் தத்துவப்படி குறுகி பெருகும். அந்த மோசன் எல்லாம் சிங்க்ரனைஸ் ஆகி நம் மண்டை உச்சியில் உள்ள சகஸ்தர சக்கரம் சுழலத்துவங்குகிறது. அதன் மூலம் மெல்லதிர்வுகள் உற்பத்தியாகி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பரவுகிறது! உங்களின் அந்த வைப்ரேஷன் பெருகப்பெருக உங்களில் ஹார்மோனிக் ஃப்ரிக்வன்ஸிகளும் அதிகமாகிறது. அதன் மூலம் அந்த ஹார்மோனிக் அலைகளின் ஆம்ளிட்யூடும் வேவ் லெந்தும் அதிகமாகிறது!

இப்படித்தான் பாருங்க முதுமையில் அல்ஜிமர் வந்து நாடி நரம்பு அடங்கிப்போன பெருசு ஒருத்தர் 30 நாள் பேலியோ இருந்தார், எதிர் வூட்டு ஆன்ட்டியே ப்ரெக்னென்ட் ஆகிட்டாய்ங்கன்னா பார்த்துக்கிடுங்க!

ஒளி சில கிலோ மீட்டர்கள்தான் பரவும், ஆனால் ஒலி பல்லாயிரம் மில்லியன் மைல்களையும் கடந்து போகும். காரணம் ஒலியின் வேவ்லெந்த் அதிகமானதால்தான். பேலியோ உண்பதால் உங்களின் இந்த ஃப்ரீக்வன்ஸி & வேவ் லெந்த் அதிகப்படுத்தப்படுகிறது!

பிரமிட்களில் வைக்கப்பட்ட மம்மிகள் கெடாமல் பல்லாயிரம் கணக்கான வருடங்கள் கழித்தும் அழுகாமல் கண்டெடுக்கப்படுவதற்கு காரணமென்ன? கவர்மெண்ட்டோ, காப்பரேட்களோ அதை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள். சாதாரணமாய் காற்றில் உழளும் ஃப்ரிக்வென்ஸிகளை எல்லாம் ஒரு பிரமிட் ஒன்றாய் குவிக்கிறது! அந்த குவிக்கப்பட்ட அலைகள் எல்லாம் இறந்தவரின் செல்களை கெடாமல் காப்பாற்றுக்கிறது! பேலியோ சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள செல்கள் எல்லாம் பிரமிட்களாக வடிவம் பெறுகின்றன. அதாவது அந்த பிரமிட்களுக்குள் இருக்கும் அதே அலை அதிர்வுகள் உங்கள் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஒரு பிரமிட் உருவாகிறது. பேலியோ உண்பதால் உங்களுக்குள் பல்லாயிரம் மில்லியன் சின்ன பிரமிட்கள் உருவாகி அலை அதிவுகளை கிளப்புகிறது! அது அதிகமானால் உங்கள் வீட்டிற்கு, பக்கத்து வீட்டிற்கு, எதிர் வீட்டுக்கு வீதிக்கே கூட பரவலாம்! தர்போதைய ஆராய்ச்சிகள் அவை ஒரு வீதி முழுதும் (சில பல கிலோமீட்டர்கள்) வரை மட்டுமே பரவுவதை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நம் பஜ்னை குழு உறுப்பினர்கள் பலரும் மத்திய கிழக்கில் வசிப்பவர்கள். அவர்களின் பேலியோ அலைஅதிர்வுகள் இந்தியாவில் வசிக்கும் அவர்கள் குடும்பத்தினரால் உணர்வதாக கூறுகிறார்கள்.

அமேரிக்காவில் பண்ணையில் கோழி கழுவும் நம் பஜனை மட மூத்த உறுப்பினர் ரஷ்ய ஏவுகணைகளை தன் அலை அதிர்வுகள் தொட்டு திரும்புவதாக உறுதி படுத்தி இருக்கிறார். அதை அவரே தன் வாயால் சொன்னார்!

குப்பை உணவான சாதம் இட்லி, சேமியா உண்பதால் 9 வயதிலேயே பீரியட்ஸ் பிரச்சனை உள்ளவர்கள், சாதா 85 வயதிலேயே மோனோபாஸ் அடைந்த இளங்குமரிகள் எல்லாம் பேலியோ சாப்பிட்டு 21 வயதுக்கு பிறகுதான் எண்ணி வச்ச தேதிகளில் பீரியட்ஸ் ஆவதையும் 100 வயதில் கருத்தரிக்கப்போவதாக மூத்த பெண் உறுப்பினர்ரும் சொல்லியதை நம்ம ஏழை விவசாயிகள் டீம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையும் அதே ஏழை விவசாயிஜி அவரே தன் வாயால் சொன்னார்.

முன்பே எப்படி பேலியோ ஏய்ட்ஸுக்கு எமனாகவும், ஆட்டிஸத்துக்கு ஆப்படிக்கிறது என்பதையும் இதே டீம் விளக்கி ஒலக விஞ்ஞானிகள் மூஞ்சியில் கரியை பூசி கறி உண்டார்கள் என்பது நாம் அறிந்ததே! இதற்க்கெல்லாம் இப்போதைய இந்த சயின்டிஃபிக் பிரமிட் அலைஅதிர்வு தியரி நிரூபித்திருக்கிறது!

ஆகவே 50000 பேர் மட்டுமே உள்ள அந்த சீக்ரெட் குழுவுக்கு ஆள் பிடிக்க இப்படி செய்யவில்லை.

வாழ்க பிரமிட் வாழ்க வைப்ரேஷன்ஸ்!

உங்கள் வைப்ரேஷன்ஸ் எங்கள் சேவை!
22:10

சி ஆர் பி - high sensitive crp - Crp என்றால் என்ன?

Crp என்றால் என்ன?
C-Reactive Protein என்பதன் சுருக்கமே CRP.
இது எங்கிருந்து வருகிறது?
எப்போதெல்லாம் நமது உடலில் கிருமி தாக்கம் (infection) அல்லது, இன்ப்ளமேஷன் (inflammation) அதாவது உள் காயம் ஏற்படுகிறதோ அப்போது நமது கல்லீரல் மற்றும் வேறு சில செல்கள் சுரக்கும் பல acute phase reactants எனப்படும் புரதங்களில் ஒன்று தான் crp.
இதன் வேலை என்ன?
உடலில் எப்போது என்ன டேமேஜ் நடந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செயல் கூறுகளில் வரும் இடை தரகர் தான் இந்த crp. இது அதிகமாக இரத்தத்தில் இருந்தால், உடலில் ஏதோ கிருமி தாக்கமோ அல்லது உள்காயமோ ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
நார்மலாக இது எவ்வளவு இருக்க வேண்டும்?
3 mg/dl எனும் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும்.
எப்பொழுது  இது அதிகமாகும்?
Crp அதிகம் ஆக பல காரணங்கள் உள்ளன.
Infection - கிருமி தாக்கம். சாதாரண சளி காய்ச்சலில் இருந்து, தொண்டை வலி, சீழ் புண், நிமோனியா என எங்கு கிருமிகள் இருந்தாலும் crp பல மடங்கு உயர்ந்திருக்கும். (கிட்டத்தட்ட 100 mg/dl மேல் உயர்ந்திருக்கும்)
Chronic inflammatory states - நீண்ட கால மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள், ருமாட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ், சொரியாசிஸ், போன்ற ஆட்டோ இம்மியூன் நோய்கள், இருதய வால்வு பிரச்சனைகள், முதலியன. இவற்றில் crp 10 mg/dl மேல் உயர்ந்திருக்கும்.
தீ காயம், எலும்பு முறிவு, போன்ற காயங்கள்.
மாரடைப்பு(myocardial infarction), கணைய பாதிப்பு (pancreatitis), போன்ற உள்ளுறுப்பு பாதிப்புகள்.
தசை சிதைவு.
புற்று நோய்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களிலும் crp குறைந்த பட்சம் 10 mg/dl எனும் அளவிற்கு மேல் உயர்ந்திருக்கும்.
High sensitive CRP என்றால் என்ன?
சாதாரண crp பரிசோதனையில் 6 mg எனும் அளவிற்கு கீழ் crp இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. எனவே குறைந்த அளவு இருந்தாலும் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை பெயர் தான் high sensitive crp. இது அதே crp தான். டெஸ்ட் தான் வேறு.
இது எங்கு அதிகம் ஆகும்?
மேலே கூறிய அனைத்து தொந்தரவுகளிலும் hscrp அதிகம் ஆகும்.
அத்துடன்,
புகை பிடிக்கும் பழக்கம்.
உடல் பருமன்.
மெட்டபாலிக் சின்ட்ரோம்
இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்காயம்.
நீரிழிவு நோய்.
இவற்றிலும் hscrp அதிகம் ஆகும்.
ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம்.
இந்த பிரச்சனைகளில் எப்போதும் hscrp 10 mg மேல் ஏறாது.
Hscrp 10 mg மேல் இருந்தாலே அவற்றிற்கு காரணம், இருதய நோயோ உடல் பருமனோ அல்ல,
மேலே கூறிய கிருமி தாக்கம், மூட்டு வலி, ஆட்டோ இம்மயூன் போன்றவைகளே.
இதை மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரிப்போர்ட் பார்த்து ஹார்ட் அட்டாக் தான் வரும்.
அவன் crp 3 mg மேலே இருந்தாலே high ரிஸ்க் என்று கொடுத்திருக்கிறான்.
>10 mg என்றால் கதை முடிந்தது என்று அர்த்தம் இல்லை.
வேறு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
அல்லது சளி காய்ச்சல் போன்றவைகளால் crp அதிகம் ஆனதா என்று தெரிந்து கொள்ள hscrp பரிசோதனையை 3 வாரம் விட்டு திரும்ப எடுக்க வேண்டும்.
நம் குழு அன்பர் ஒருவரது குழந்தைக்கு சிறுநீர் infection உள்ளது என்றும் அதனால் crp அதிகம் ஆகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆன்டிபயாடிக் மருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த அன்பர் என்னிடம் கேட்கிறார், பசு மஞ்சள் சாப்பிட்டால் crp குறைந்து விடுமா என்று!!
சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றால் இப்படி தான் ஆகும்.
Crp குறைய என்ன செய்ய வேண்டும்?
நல்ல உணவுமுறை. நம் பேலியோ உணவுமுறை போன்று இயற்கையை ஒன்றி அமைந்த மாவுச்சத்து கம்மி உண்ணும் நல்ல உணவுமுறை hscrp ஐ குறைக்கும்.
உடல் பருமன் குறைத்தல். அதுவும் நம் பேலியோவில் நடக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல். இதுவும் பேலியோவில் நடக்கும்.
புகை, மது விட்டொழிதல்.
மிதமான உடற்பயிற்சி.
பசு மஞ்சள்
கிருமி தாக்கத்தினால் crp அதிகம் ஆனால் அவற்றுக்குரிய மருந்துகள் எடுத்தால் மட்டுமே crp குறையும். நம் உணவுமுறையோ பசு மஞ்சளோ ஒன்றும் செய்யாது.
ஆட்டோ இம்மியூன் நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களில் மருந்துகளுடன் நம் உணவுமுறையும் பசு மஞ்சளும் சேரும்போது பல பயன்களை அளிக்கும்.
பசு மஞ்சளின் வேலை என்ன? ஏன் அது நம் குழுவில் பரிந்துறைக்கப்படுகிறது?
பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது.
அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம், ஆட்டோ இம்மியூன் நோய்கள், osteoarthritis எனும் மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன.

இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன.

Atherosclerosis எனப்படும் இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன.
எனவே தான் நம் குழுவில் crp அதிகம் இருப்பவர்களுக்கு பசு மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏன் பேலியோ எடுக்கும்போது சிலருக்கு hscrp குறைவதில்லை அல்லது ஏறுகிறது?
மேலே கூறியுள்ளது போல பல்வேறு காரணங்களால் hscrp அதிகம் ஆகிறது. உடல் பருமன், இரத்த குழாய் உள்காயம், மெட்டபாலிக் சின்ரோம் ஆகிய காரணங்களால் hscrp அதிகம் ஆகியிருந்தால் மட்டுமே பேலியோவினால் குறையும். வேறு காரணங்கள் என்றால், தகுந்த மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Hscrp நார்மலாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா?
இல்லை. Hscrp ஒரு marker. அவ்வளவே. மேகம் கறுத்து இருந்தால் மழை கட்டாயம் வரும் என அர்த்தம் இல்லை. இல்லை மேகமே இல்லை என்றாலும் மழை வராது எனவும் அர்த்தம் இல்லை. Hscrp போல் ஒவ்வொரு நோய்க்கும் நிறைய marker இருக்கும். அனைத்தையும் வைத்து பார்த்து, பொது உடல் ஆரோக்கியத்தையும் வைத்து பார்த்து மட்டுமே நோய் வரும் வாய்ப்புகளை கூற முடியும்.
சுருக்கமாக சொன்னால், hscrp என்பது தூரத்தில் ஒலிக்கும் சைரன் ஒலி போன்றது. அது போலீஸாகவும் இருக்கலாம், அம்புலன்சாகவும் இருக்கலாம், தீயணைப்பு வண்டியாகவும் இருக்கலாம், பக்கத்து வீட்டு குழந்தை விளையாடும் பொம்மையின் ஒலியாகவும் இருக்கலாம். எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை தெரியும்.
இதுவே hscrp க்கு என் கோனார் உரை.
22:04

பேலியோ ஆரம்பித்து சில நாட்களில் வரும் சிக்கல்களைப் பார்ப்போம்.





* தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் : இது உங்கள் உடம்பிலிருந்து கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச் சத்து விலக்கப் படுவதால் உருவாகும் தற்காலிக நிலை. பொதுவாக மூன்று நாட்களில் சரியாகும். இதற்கு கார்ப் வித் டிராயல் சிம்ப்டம் அல்லது கார்ப் ஃபுளூ என்று பெயர்.
இதற்கு தண்ணீர் அதிகம் குடிப்பது, வெதுவெதுப்பான தண்ணீரில் 5 கிராம் வரை கல்லுப்பு போட்டு குடிப்பது, கல்லுப்பு போட்டு லெமன் ஜூஸ் குடிப்பது போன்றவை உதவும்.

* அதீத சோர்வு : இதற்குக் காரணமும் கார்ப் புளூதான். மேலும் பேலியோவில் சரியான அளவில் சாப்பிடவில்லையென்றால் உடலுக்குத் தேவையாம வைட்டமின்களும் மினரல்களும் குறைபாடு ஏற்பட்டு இது வரலாம். இவர்கள் தினமும் ஒரு மல்ட்டி வைட்டமின் டேப்லட் எடுக்கலாம். அல்லது தேவையான அடிப்படை வைட்டமின்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் குறைவாகச் சாப்பிடுதல். பெண்கள் குறைந்த பட்சம் 1250 கலோரிகளும், ஆண்கள் 1500 கலோரிகளும் உண்ண வேண்டும். இதற்குக் குறைந்தால் உடலின் அடிப்படை மெடபாலிசம் குறைந்து அதீத சோர்வு, கால்கள் துவண்டு போதல் போன்றவை ஏற்படலாம்.

* வயிற்றுப் போக்கு : பல காரணங்களால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். முதல் காரணம் உணவு ஒவ்வாமை. சாப்பிட்ட உணவு ஒவ்வாமையாக இருந்தால் அந்த உணவைத் தவிர்க்க வேண்டும். பாதாம் ஊற வைப்பதில் சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சனங்கள் படிந்திருக்கலாம். பாதாமை ஊற வைக்கும் போது இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரை மாற்ற வேண்டும். மேலும் ஊற வைத்த பாதாமை உலர வைத்து நெய் விட்டு வறுத்து சாப்பிடுவது நல்லது.
வயிற்றில் உள்ள ஜீரனத்துக்கு உதவும் பாக்டீரியா காலனிகள் தொடர்ச்சியான கார்ப் உணவுகளால் அழிந்திருக்கலாம். அதற்கு ப்ரோபயாட்டிக் கெஃபிர் அல்லது ஊறுகாய்கள் அல்லது கிம்ச்சி போன்றவைகளை தொடர்ச்சியாக தினமும் எடுக்க வேண்டும். இந்த நிலை சரியாக நீண்ட காலமாகும்.
அல்சர் உள்ளவர்களுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. வயிற்றுப் போக்கு ஏற்படும் போடு நீர்ச்சத்து அதிகளவில் வெளியேறுவதால் நிறைய தண்னீஇர் அருந்த வேண்டும். தேவைப்பட்டால் தற்காலிகமாக இளநீர் அல்லது எலெக்டிரோலைட்டுகள் எடுக்கலாம்.

* மலச்சிக்கல் : அசைவ உணவுகள் அதிகம் எடுத்து நார்ச்சத்து எடுக்காததால் மலாசிக்கல் வருகிறது. இதற்கு இரவு உணவில் 150 கிராம் போல கீரைகள் எடுப்பது நல்லது. காலை எழுந்தவுடன் நெல்லிக்காய் ஜூஸ் உப்பு போட்டு குடிப்பதும் உதவும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. வாரம் நான்கு முறை போனாலே போதுமானது.
எந்த அறிகுறிகளும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

நன்றி  : சிவராம் ஜெகதீசன் 
22:01

Repeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.


பாதாம் எண்ணிக்கை 100 கிராமா? 100 நம்பரா?

பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண்ணிக்கையிலும் அது கிட்டத்தட்ட 100 பாதாம்களே வரும். அதாவது ஒரு கிராம் = ஒரு பாதாம். கூடக் குறைய இருக்கலாம் தவறில்லை.

டயட்டுக்கு முன்பாக கண்டிப்பாக உடல் பரிசோதனை, ப்ளட் டெஸ்ட் செய்யவேண்டுமா?

கண்டிப்பாக செய்துகொள்வது நல்லது, அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தெரியவரும், அதற்கேற்ப சில பொருட்களை விலக்கியும் சேர்த்தும் டயட் எடுக்க முடியும். டயட்டிற்கு பின்பும் இந்த டெஸ்ட்களை மீண்டும் எடுப்பதன் மூலம் டயட்டால் விளைந்த நன்மைகள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே தெரியவரும்.

கடைகளில் விற்கப்படும் பேலியோ பிரியாணி ரைஸ், பேலியோ பரோட்டா, பேலியோ ப்ரோட்டீன் பார், பேலியோ சர்க்கரை, பேலியோ சுகர்லெஸ் கரும்பு ஜூஸ், பேலியோ சப்பாத்தி, பேலியோ எண்ணெய் போன்றவற்றை வாங்கி உண்ணலாமா?  

கூடாது. பேலியோவில் உங்கள் உணவை நீங்களே சமைத்து உண்ணுவதே சிறப்பு. ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுகள், பேலியோ என்ற அடைமொழியுடன் கடைகளில் விற்கப்படுபவனவற்றை வாங்கி காசை வீணாக்காதீர்கள். தேவையான பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடித்தது போல சமைத்து ஆரோக்கியமாக டயட் துவங்குங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் என்ன பொருட்கள் கலந்திருக்கிறது என்று பாருங்கள், செயற்கை நிறங்கள், செயற்கை இனிப்பு, ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவைகள் இருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது உத்தமம்.

கோழி முட்டை நாட்டுக் கோழி முட்டையா? ப்ராய்லர் கோழிமுட்டையா? எது சாப்பிடுவது?

பேலியோவைப் பொறுத்தவரை தானாகவே இரை தேடி உண்ணும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே முதல் தேர்வு. முட்டையைப் பொறுத்தவரை நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் உன்னதம். கிடைக்காவிட்டால் ப்ராய்லர் கோழி முட்டைகளை சாப்பிடலாம். கவனம் நாட்டுக் கோழி முட்டை என்பது பண்ணைகளில் ஹைப்ரிட் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு, அந்தக் கோழிகள் இயற்கையாக உண்ணாத பொருட்களை தீவனமாகக் கொடுத்து உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும், கோழிகளும் விற்பனையாகிறது. இதை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட ப்ராய்லர்கோழியே வாங்கி உண்ணுவது உத்தமம்.

உங்களால் அருகாமை கிராமங்களில் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகளை, முட்டைகளை வாங்க முடியுமென்றால் உங்கள் உடல் நலத்திற்கென வாரம் ஒரு நாள் பயணம் செய்து அப்படி வளர்ப்பவர்களிடம் வாங்கிப் பயனடையலாம். உங்கள் முயற்சியையும், நேரத்தையும் பொறுத்தது அது. இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாதவர்கள், ப்ராய்லர் வாங்கி டயட்டை முன்னெடுங்கள்.

டேட்ஸ் சாப்பிடலாமா? ஓட்ஸ் சாப்பிடலாமா? பழங்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?வேர்க்கடலை, பருப்பு ஏன் தவிர்க்கவேண்டும்? பீன்ஸ் ஏன் சாப்பிடக்கூடாது? ஏன் பழங்களை ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது?

டேட்ஸ் என்பது ஒரு இனிப்பு உணவுதான், அதைச் சாப்பிட்டு இரும்புச் சத்து உடலில் சேரவேண்டுமானால் ஒவ்வொரு வேளையும் 1.5கிலோ அளவுக்குச் சாப்பிடவேண்டும், அதில் சேரும் இரும்புச் சத்தைவிட உங்களின் உடலில் சேரும் சர்க்கரை அளவுகள் அதிகம்.

பழங்களிலும் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, டயபடிஸ் இருப்பவர்கள் பழம் சாப்பிட்டால் உடனே சர்க்கரை அளவுகள் ரத்தத்தில் ஏறும். போலவே உடல் எடை குறைக்க டயட் எடுப்பவர்கள் முதல் 30  
நாட்கள் பழங்கள் தவிர்ப்பது நல்லது, இது இன்சுலினை ஏற்றும், உடல் எடை கூடும், ஏன் எடை குறையவில்லை என்று குழப்பமே மிஞ்சும்.

பருப்பு, லெகூம் வகைகளில் வரும் பீன்ஸ் வகைகளும் இயற்கையாகவே பைட்டிக் அமிலம் (Pytic Acid) என்ற தற்காப்பு விஷயத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த இயற்கை தற்காப்பு விஷயம் பருப்பு, பீன்ஸ் வகைகளை நாம் சமைத்து உண்ணும்போதும் அழியாமல் உடலில் சேர்ந்து பல உபாதைகளையும், அதனுடன் நாம் உண்ணும் பிற உணவுகளின் சத்துக்களை நம் உடலில் சேரவிடாமலும் செய்கின்றன. அதனாலேயே பாலியோவில் அவற்றுக்குத் தடை.

பேலியோவில் குதித்துவிட்டேன், நான் எப்படி சாப்பிடவேண்டும், கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டில் இருப்பவைகளுடன் கூடவே கோதுமை தோசை, தேன் தினைமாவு, ஹெர்பாலைப் பவுடர், கொள்ளு ரசம், ஓட்ஸ் அல்வா, அப்பளம், எண்ணெயில் நன்றாகப் பொரித்த சிக்கன், வெல்லம் போட்ட கடலைமிட்டாய், இன்னபிறவற்றையும் கூட சேர்த்து சாப்பிடலாமா?

கூடாது, கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை மட்டும் முதல் 30 நாட்கள் கடுமையாகக் கடைபிடிக்கவும். மேலே சொன்ன உணவுகள் யாவும் பேலியோவில் விலக்கப்பட்டவை.

நீங்கள் கொடுத்த டயட் சார்ட்டினை நானே சிறிது மாற்றி, காலையில் ஒரு காபியுடன் 5 பட்டர் பிஸ்கெட் (பட்டர் பாதாம்தானே?) அல்லது மேரி பிஸ்கெட், 100 பாதாமுக்குப் பதில் 15 பாதாம், இரண்டு இட்லி, மஞ்சள் கரு இல்லாத முட்டை, இதயத்துக்கு நலமளிக்கும் சன்ப்ளவர் ஆயிலில் செய்த மெதுவடை 1, மதியம் 1 ப்ளேட் சோறு, பீன்ஸ் பொரியல், அவரைக்காய் கூட்டு, நிறைய சன்ப்ளவர் எண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கு பொரியல், இரவு சப்பாத்தி 4, பனீர் டிக்கா, சிக்கன் 65 போன்றவைகளை சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டால் விரைவில் எடை குறையும் என்பதற்காக நானே சொந்தமாக ஜிந்திச்சி இப்படி டயட் சார்ட் எடுத்துக்கொண்டேன், இது சரியான டயட்தானா?

 வேலை மெனெக்கெட்டு டயட் சார்ட் கொடுப்பது அதை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மேலே உள்ள உணவுகளில் சூரியகாந்தி எண்ணெய், பொரித்த உணவுகள், பிஸ்கெட், சோறு, சப்பாத்தி போன்றவைகளால் உங்கள் எடை கூடும், எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 போன்றவைகளால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவுகள் கூடும் எனவே தயவுசெய்து உங்கள் ஜிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கொடுத்துள்ள டயட் சார்ட்டின்படி வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். குறைவாகச் சாப்பிடுவது, கலோரி கணக்குகள் இங்கே உதவாது. பசியுடன் இருக்கவைக்கும் எந்த டயட்டும் நல்ல டயட் இல்லை.

என் எடை 105 கிலோ, எனக்கு சர்க்கரை குறைபாடு, பிபி, தைராய்ட் எல்லாம் உண்டு, நான் பேலியோவை கடுமையாக கடைபிடித்துவிட்டு என் எடையை 75 கிலோவுக்குக் குறைத்துவிட்டு, சர்க்கரை, பிபி எல்லாம் நார்மலாக்கிவிட்டு பிறகு சாதாரணமாக நான் சாப்பிடலாமா? 

தாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் அப்படிச் சாப்பிட ஆரம்பித்த உடன் உங்கள் எடை ஏறும், சர்க்கரை, பிபி அளவுகள் கூடும், பழைய படி எடையில் செஞ்சுரி அடித்து மேல் மூச்சு வாங்க மீண்டும் பேலியோவுக்குத்தான் ஓடிவருவீர்கள்.

அப்படி என்றால் காலம் பூராவும் நான் பேலியோவைத்தான் உண்ணவேண்டுமா?

கிட்டத்தட்ட ஆமாம். காலம்பூரவும் அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, இனிப்புகள், குப்பை உணவுகள் மானாவாரியாக உள்ளே தள்ளி உடல் நிலை கெட்டபோது வராத இந்தக் கேள்வி ஏன் பேலியோவுக்கு மட்டும் வருகிறது என்பதை யோசியுங்கள். உங்களின் சாதாரண உணவுகள் உங்கள் உடலுக்கு உபாதைகள் தருகின்றன, பேலியோ உங்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகிறது என்றால் எதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உண்பீர்கள் என்பதற்கான விடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேன்டும். 

ஏன் காபி குடிக்கக்கூடாது? என்னால் காபி குடிக்கமுடியவில்லை என்றால் நான் இறந்தேவிடுவேன்.

இல்லை நீங்கள் இறக்கமாட்டீர்கள். காபி என்பது ஒரு போதைதான், இருதயத்துக்கு பலமான அதிர்ச்சி கொடுக்கும் இந்தப் பானம்தான் உங்களின் ரத்த அழுத்தத்திற்கான முழு முதல் காரணி. நீங்கள் 50 வருடம் தினம் 10 லோட்டா காபி குடிப்பவர்களாகக் கூட இருங்கள், 1 வாரம் காபி குடிக்காமல் இருந்துவிட்டால் அதன்பிறகு இப்படி ஒரு பானத்திற்காகவா உயிர்விடத் துணிந்தோம் என்று நீங்களே உங்களைப் பார்த்து கேட்கும் நிலை வரும். ஆம், காபி குடிப்பதை விட்டால் முதல் 3-4 நாட்களுக்கு தலை வலிக்கும், நன்றாக நெற்றியில் சுக்கை பாலில் அரைத்து பற்றுப் போட்டுவிட்டு கம்மென்று படுத்து விடுங்கள், 5-ம் நாள் காபி எனும் போதை உங்கள் வாழ்விலிருந்து ஒழிந்துவிடும். இது நரசுஸ் மீது ஆணை. கேவலம் ஒரு காபியைக் கூட உணவிலிருந்து ஒழிக்கமுடியாவிட்டால் நம்மால் எந்த டயட்டையும் எடுத்து உடல் நலம் பேண முடியாது.

வேறு வழியே இல்லை என்றால்..

காபிக்கு மாற்றாக புல்லட் ப்ரூப் காபி, பட்டர் டீ, க்ரீன் டீ போன்றவைகள் எடுக்கலாம். 

புல்லட் ப்ரூப் காபி செய்முறை - இங்கே.

பட்டர் டீ செய்முறை - இங்கே

பேலியோ டயட் ஆரம்பித்த உடன் எனக்கு மலச்சிக்கல் வருகிறது. வயிறு வலிக்கிறது, பேதி ஆகிறது, தலை வலிக்கிறது, சோர்வாக உணர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் உடல் கார்போஹைட்ரேட் மூலம் சக்தி கிடைப்பதிலிருந்து கொழுப்பு மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வழி மாறுவதற்கான அறிகுறிகள்தான் மேலுள்ளவை. பெரும்பாலும் ஒரு வாரத்திறகுள் இவை சரியாகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். டயட் சார்ட்படி டயட் எடுத்தாம் மட்டுமே இது பொருந்தும், உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் சரியான அளவு குடிக்காமல் விட்டாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம்.

மலச்சிக்கல் நீங்க பேலியோ காய்கறிகள், தினம் ஒரு கீரை, காலை எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர், போன்றவை உதவும். அதிக காய்கறிகள், சரியான நீர் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும். 

பேலியோ எடுத்தது முதல் தாகம் அதிகமாக இருக்கிறது, வாய் உலர்ந்து போகிறது, கண் எரிச்சலாக இருக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், கொழுப்பு சார்ந்து தானியம் தவிர்த்து டயட் எடுக்கும்பொழுது உடலில் முதலில் ஏற்படும் எடை இழப்பு என்பது தானியம் சாப்பிட்டதால் உடல் தேக்கி வைத்திருக்கும் நீர் எடையே. இந்த உடல் நீர் வற்றும்பொழுது தாகம் எடுக்கும், எனவே பேலியோவில் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். 3-4லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். வாய் உலர்ந்து போகுதல், கண் எரிச்சல் போன்றவை உடலில் கொழுப்பு எரிவதாலும் நிகழலாம் அல்லது நீங்கள் அளவு குறைவாக சாப்பிடுவதாலும் நிகழலாம்.   

பேலியோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு டயட் இல்லையா? நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன், எனக்கு பேலியோ டயட் கடைபிடிக்க முடியுமா?

முடியும். தெளிவாக இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான டயட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும். எல்லாவகை உணவுப் பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் டயட் சார்ட் தேவைப்படுவதால், விருப்பு, வெறுப்பு, மதம், கடவுள், ஜாதி இன்னபிறவற்றை உடல்நலம் காக்கும் உணவுக்குறிப்புகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.

மேலே தெளிவாக டயட் சார்ட் கொடுக்கப்பட்டும் எனக்கு எழும் சந்தேகங்கள் பின்வருமாறு:
டேட்ஸ், ஓட்ஸ், சிறு தானியங்கள், வேர்க்கடலை, முந்திரி, தேன், வெல்லம், கருப்பட்டி, ஸ்டீவியா, சுகர் ப்ரீ மாத்திரைகள், காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், வெந்தய தோசை, மசாலாதோசை, கேஎப்சி/மெக்டொனால்ட் சிக்கன், போன்ற நீங்கள் டயட் சார்ட்டில் குறிப்பிடாத உணவுகளைச் சாப்பிடலாமா?

கூடாது.

தெள்ளத் தெளிவாக இந்த பேலியோவின் அடிப்படையிலான டயட் சார்ட் என்பது ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு சார்ந்த அடிப்படையைக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. டயட் சார்ட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகச் சாப்பிடுவது, மற்ற உணவுகளைக் கலந்து சாப்பிடுவது. ஹெர்பாலைப், கொள்ளு பவுடர், மூலிகைகள், சிட்டுக்குருவி லேகியம் போன்றவைகளை சேர்த்து உண்பது என்பது கூடாது.

பேலியோ டயட் எடுக்கும்பொழூது சரக்கடிக்கலாமா? 
பேலியோ டயட் என்று இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாராயமும் சிகரெட்டும் கூடவே கூடாது. ஆண்டுக்கணக்கில் சிகரெட்டும், சரக்குமாக இருந்த நண்பர்கள் பேலியோ டயட் எடுத்தபிறகு அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு இந்தப் பழக்கங்களிலிருந்து வெளியேற விருப்பம் இருந்தால் இந்த டயட் அதற்கு உதவும். சரக்கடிக்க பேலியோ டயட்டை சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தினால் நிச்சயம் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

கூகுள் தளத்தில் பேலியோ என்று தேடினால் வரும் ரிசல்டுகளில் சொல்லப்படுபம் விஷயங்களுக்கும், இந்தக் குழுவில் சொல்லப்படும் விஷயங்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறதே?

ஆம். ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் நமது மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை பேலியோ டயட்டில் செய்திருக்கிறோம். உலகின் முழு முதல் முட்டை கூட இல்லாத சைவ பேலியோ டயட்டும் இந்தக் குழுவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் மூலம் பெறப்படும் கொழுப்புணவுதான் அதிக நன்மைகளைத் தரும் என்றாலும், பிறப்பிலிருந்தே சைவ உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு பல காரணிகளால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காக உடலுத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த சைவ டயட் தயாரிக்கப் பட்டுள்ளது.

சைவ பேலியோ, அசைவ பேலியோ எது சிறந்தது?

பேலியோ என்றாலே அசைவம்தான், மனிதன் நெருப்பே கண்டுபிடிக்காத காலத்தில் சைவத்தை விட அசைவமே அவனுக்குத் தெரிந்த பிரதான உணவாக இருந்தது. ஆக அசைவ பேலியோவே சிறந்தது, உடல் எடை குறைப்புக்கு மட்டும் என்றால் சைவ பேலியோவும், நடை பயிற்சியுமே போதுமானது. உடல் பிரச்சனைகளோடு டயட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடத் தயார் என்றால் அவர்களுக்கு பலனலளிக்கக் கூடிய டயட் பேலியோவில் கிடைக்கும். நீங்கள் பால் குடிப்பீர்கள் என்றால் முட்டையும் அதைப் போலத்தான் என்று நினைத்துக்கொள்ளவும். முடியவே முடியாத மனத்தடை என்றால் வேண்டியதில்லை, மனத்தடையோடு எந்த புதிய முயற்சியும் நன்மை தராது. 
21:59

பேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.

யார்மூலமாகவோஎதையோ படித்துயாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம்.
உங்கள் வரவு நல்வரவாகுக.
இந்தக் பேஸ்புக் க்ரூப்பிற்குள் வந்துவிட்டீர்களே தவிரஇங்கே என்ன பேசுகிறார்கள்இது என்ன டயட்பேலியோ என்றால் என்னஅதை வேகவைத்து சாப்பிடவேண்டுமாகாலை தேன் கலந்து சுடுநீரில் கலந்து சாப்பிடவேண்டுமாசப்பாத்தியின் உள்ளே வைத்து சாப்பிடவேண்டுமா என்றெல்லாம் புரியாமல் சரிஇது ஏதோ வேலை வெட்டி இல்லாத க்ரூப் போல இருக்கிறதுஒரு காலை வணக்கம் இல்லை, 8 தலை நாகம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் அதிசிய வீடியோக்கள் இல்லைபெரிய கேக் படத்தைப் போட்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லைஇந்தியா கிரிக்கெட்டில் வெற்றிபெற்றும் ஒரு பாரதமாதாகி ஜே என்ற போஸ்ட் கூட இல்லை என்று குழம்பி நீங்கள் தவிக்கிறது புரிகிறது.
நிற்க.
இது ஒரு டயட் க்ரூப்இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள்இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும்குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.
 
இந்த டயட்டைப் புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவுஎது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள்ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காதுஎனவே அனாவசியமான குழப்பங்கள்கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இந்த டயட்டின் அதிர்ச்சிகள்:
இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.
அரிசி. (பொன்னிகைக்குத்தல்பாஸ்மதிசுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசிபாரம்பரிய அரிசிஆர்கானிக் அரிசி)
கோதுமை. (குட்டை கோதுமைநெட்டை கோதுமைடயாப்ரீ கோதுமைசப்பாத்திப்ரெட்)
மைதா. (கேக்குகள்பரோட்டாக்கள்)
பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
பழங்கள் ஜூஸ்.
அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல்டால்டாவில் செய்யப்பட்டது வரை)
தேன்நாட்டு சர்க்கரைவெள்ளை சர்க்கரைசுகர் ப்ரீ மாத்திரைகள்ஹீலர் ஜாங்கிரிகள்கேக்அல்வாஇறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
ஓட்ஸ்மேகிஹெர்பாலைப்லேகியங்கள்உடல் எடை குறைப்பு மாத்திரைகள்மருந்துகள்சித்தாஆயுர்வேதாயுனானிஇன்னபிற)
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர்தேங்காய்நல்லகடலை கடுகு கனோலாரைஸ்பார்ன்டால்டாபாமாயில் எண்ணெய்கள்.
ஜங்க் புட் எனப்படும்குப்பை உணவுகள் அனைத்தும்.
அனைத்துவகை பீன்ஸ்கிழங்கு வகைக் காய்கறிகள்அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
அனைத்து வகை பருப்புகள்புளி.
அனைத்துவகை சோயா பொருட்கள்.
காபிடீஅனைத்துவகை கூல் டிரிங்க்ஸ்எனர்ஜி ட்ரிங்க்ஸ்சிட்டுக்குருவி லேகியங்கள்.
போங்க சார்அப்புறம் என்னத்தான் சாப்பிடறதுஇது என்ன டயட் க்ரூப்பாஇல்ல மோட்சத்துக்கு ஆளெடுக்கிறீங்களாஎன்று நீங்கள் கதறிக் கடுப்பாகி மயக்கம் போட்டு விழப்போவதற்கு முன்பாக மேலேயும்கீழேயும் படியுங்கள்.
மேலே முதலில் என்ன சொன்னோம்?
 
||||||||| இது ஒரு டயட் க்ரூப்இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள்இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும்குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.
 
இந்த டயட்டைப் புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவுஎது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள்ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காதுஎனவே அனாவசியமான குழப்பங்கள்கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும். ||||||||||||
ஓக்கேஇப்பொழுது ஏன் சர்ப் வாங்கி அலசி காயவைத்து திறந்த மனதுடன் இந்த டயட்டை அணுகுங்கள் என்று சொன்ன காரணம் புரிந்திருக்கும்அது புரிந்தால்தான்எடை குறைப்பு என்றாலேவெந்நீரில் தேன் கலந்து சாப்பிடவேண்டும்கொள்ளு வேகவைத்து சாப்பிடவேண்டும்சிறுதானியங்களை ஊறவைத்து சாப்பிடவேண்டும்குறைவாகச் சாப்பிடவேண்டும்கை கால் வீசி நடந்துகளைத்துப் போய் பட்டர் பிஸ்கெட்டும்டீயும் குடித்துவிட்டுஆழ ஒரு தம் அடித்துவிட்டு இருப்பதே ஆரோக்கிம்ஹெர்பாலைபை குடித்துவிட்டு ப்ளேட் ப்ரியாணையை அசால்ட்டாகத் தின்றால் எடை குறைந்துவிடும், 50 கிலோ மீட்டர் ஓடினால்நடந்தால்சைக்கிள் ஓட்டினால்ட்ரெட்மில்லில் ஓடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று முட்டிவலியோடு நீங்கள் நம்புவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சர்ப் போட்டு நீங்கள் சரியாக அலசாததால்சைடில் லேசாக (அப்ப அருகம்புல்லும்கற்றாழையும் போட்டு கம்மங்கூழ் குடிக்கச் சொல்றாங்களோஎன்று ஒரு கறை இருப்பதால்மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
||||||||| இது ஒரு டயட் க்ரூப்இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள்இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும்குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.||||||
போதும்யாபோதும் அந்தக் கீரிப்புள்ளையையும்பாம்புபையும் அவுத்துவிட்டு சண்டை போடவைங்க என்று நீங்கள் நினைத்தால் ஓரளவு இந்த டயட் பற்றி அறிய நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்யெஸ்இதற்கு மேல் வரும் செய்திகளைப் படிக்காமல் போனால் உங்களுக்குடயபடிக்ஹார்ட் அட்டாக்உடல்பருமன் போன்ற பலவியாதிகள் வரும்.
ரைட்இனி இந்த டயட் பற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:
இங்கே பரிந்துரைக்கப்படும் உணவுகள் கீழ்வருமாறு:
கிழங்குகளில்லாதபீன்ஸ் இல்லாதபருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம்பிஸ்தாமகடாமியாவால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய்வெண்ணெய்சீஸ்பனீர்முழுக்கொழுப்பு பால்தயிர்மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.
யெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:
இதெல்லாம் சாப்பிட்டால் மாரடைப்பு வராதா?
டயபடிக் இருப்பவர்களுக்கு சுகர் ஏறாதா?
உயிருக்குப் பிரச்சனை இல்லையா 
எல்லாம் போகட்டும்,
இவ்வளவு கொழுப்பு சாப்பிட்டால் எப்படி உடல் எடை குறையும்?
தமிழனின் பாரம்பரிய உணவுகளான அரிசிகோதுமைமேகிபட்டர்பிஸ்கட்பிரியாணிபரோட்டா எல்லாம் சாப்பிடக்கூடாது என்கிறீர்களேநீங்கள் சொல்வது டயட்டாஎன்ற கேள்விக்கெல்லாம் விடையை நாங்கள் ஒரு சிறிய குழந்தைக்கும் புரிவதுபோல விளக்கமாக எழுதி இருக்கிறோம்பொறுமையாக கீழே உள்ள லிங்க்குகளை வாசிக்கவும்.