All about Paleo Diet

Post Top Ad

Showing posts with label The Best Paleo Green Smoothie Ever (Save This Recipe). Show all posts
Showing posts with label The Best Paleo Green Smoothie Ever (Save This Recipe). Show all posts

Sunday, 12 February 2017

23:01

பேலியோ பற்றி மக்களின் தவறான அணுகுமுறை...

புத்தகக் கண்காட்சி புண்ணியத்தில் திருப்பூர் வாசியாக ஒருவாரம் ஓடிவிட்டது. தொடர்சியாக இங்கே மக்களைச் சந்தித்ததில் பல மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகளையும், மிகவும்  கவலை தரும் செய்திகளையும் கேட்டேன் / கேட்டுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அவற்றினை அனைத்து குழு மக்களுக்கும் அறிவிப்பது என் கடமை.

முதலில் மகிழ்வைத் தரும் செய்திகளில் சில:

குடும்ப சகிதமாக பல மக்களைச் சந்தித்தேன். அதில் பலர் ஏதோ ஒரு காரணம் குடியின் பிடியில் விழுந்து மீள முடியாமல் சிக்கலாக்கிக் கொண்ட வாழ்க்கையிலிருந்து பேலியோ மூலம் சுலபமாக மீண்டிருக்கிறார்கள். குடியிலிருந்து மீண்டவரை விட அவரின் குடும்பத்தினரின் மகிழ்ச்சி சொல்லில் வடிக்க முடியாது. தெளிவாக ரத்தப் பரிசோதனை செய்து, குழுவில் போட்டு உணவு அட்டவணை பெற்று சரியான ஆரோக்கியத்தை அடைந்திருக்கிறார்கள்.

வெகு இளம் வயதில் ஒரு பெண்மணி கிட்டத்தட்ட 400 சொச்சம் இருந்த தன் சர்க்கரை அளவை பேலியோவுக்கான ரத்தப் பரிசோதனை முடிவில் அறிந்துகொண்டு சரியாக உணவினை எடுத்து இன்றைக்கு HbA1C 10 லிருந்து 5 க்கு கொண்டுவந்திருக்கிறார். நல்ல எடை குறைத்து ஆரோக்கியம் மீண்டிருக்கிறார். இந்தப் பரிசோதனை செய்யாவிட்டால் தனக்கு சுகர் இருப்பதே அறியாது பெரும் சிக்கலில் மாட்டி இருப்பேன் என்று அவர் கூறியதும், தெளிவாக இந்த உணவுமுறையை அவர் பின்பற்றுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பலருக்கு சொல்வதறியாது கை குலுக்கி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துச் சென்றார்கள். இதில் குழு சார்பில் நாங்கள் பெருமையடையவோ, கிரீடம் சுமக்கவோ ஒன்றுமே இல்லை என்பதோடு, இது போன்று ஆயிரக்கணக்கில் பார்த்தபடியால் நன்றி சொல்லி கை கூப்பிக் கடக்க முடிந்தது. பேலியோவின் வெற்றிக்கு நாங்கள் சப்போர்ட் மட்டுமே அனைத்து ரிசல்ட்களுக்கும் காரணம் உங்களின் கடுமையான, கட்டுப்பாடான உணவுப்பழக்கமும், அர்ப்பணிப்பும்தான். நாங்கள் வெறும் கருவியே. எக்காலத்திலும் பேலியோ மட்டுமே கதாநாயகன்.

இனி கவலை தரும் விஷயங்கள்:

ஏற்கனவே இதைப்பற்றி நான் சொல்லி இருந்தாலும், இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதி மக்களில் பலர் வாட்ஸப், தெரிந்தவர் சொன்னார் என்ற அளவிலே திலகவதி மதனகோபால் அவர்கள் சொன்னது போல ஒரு பேஷனான பேலியோவை அணுகுகிறார்கள். சொந்த உடல்நலனின் ஆரோக்கியத்திற்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் போலி பேலியோ கன்சல்ட்களிடம் காசைக் கொட்டி கறியும் பாதாமும் சாப்பிட்டு ரத்தப் பரிசோதனை கூட எடுக்காமல் உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ஈரோட்டிலிருந்து வந்த மக்களிடம் இதை அதிகம் பார்த்தேன். பேலியோ கன்சல்டிங்கில் காசு பார்த்த சில அல்பங்கள் ரத்தப் பரிசோதனைக்கு ஆகும் சொற்ப பணத்தையும் பாதாம் விற்றுப் பிழைத்து மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இத்தனைக்கும் மக்கள் இவர்களிடம் அதிக கட்டணம் கொடுத்து தவறான அறிவுரைகளைப் பெறுகிறார்கள். காலை இறைச்சி, மதியம் பாதாம், இரவு இறைச்சி அல்லது முட்டை இவ்வளவுதான் ஈரோடு, திருப்பூர், கோவை போலி கட்டணப் பேலியோ அட்வைஸ் கும்பலின் பேலியோ அறிவுரைகள். எனவே ரத்தப் பரிசோதனை செய்யாமல் காசு கொடுத்து உடலை வீணாக்கிக்கொள்ள விழையும் அன்பர்கள் மேற்கூறியபடி உண்டு இலவசமாக உடலைப் புண்ணாக்கிக்கொள்ளும்படி ஆழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

40 வருடம் தண்ணியடித்து, தம் அடித்து, குப்பை உணவுகள் உண்டு, இதைப் போன்ற பதர்களிடம் காசு கொடுத்து மூன்று வேளையும் கறியும் முட்டையும் தின்றால் உங்களுக்கு சாதாரண மனிதர்களை விட வியாதிகள் அதிகம் வரும்.

ஆக, நாம் குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. பேலியோ துவங்குவதற்கு முன் குழுவில் பரிந்துரைக்கும் முழு ரத்தப் பரிசோதனை அவசியம். அதில் இருக்கும் சிக்கல்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேலியோ ஒத்துவருமா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவரும். அதன்படி உங்களுக்கேற்ற பேலியோ உணவுகளோ அல்லது மருத்துவரைப் பார்க்கவேண்டிய அறிவுரைகளோ கிடைக்கும். இதற்கான வழிகள் இரண்டு.

01. ஆரோக்கியம் நல்வாழ்வு குழு மூலம் இலவசமாக சேவையைப் பெற்றுக்கொள்வது.
02. பேலியோ பற்றி அறிந்த மருத்துவரை அணுகி அவர் கேட்கும் கட்டணம் கொடுத்து அவர் அறிவுரைப்படி பேலியோவைத் தொடர்வது.

மேற்கூறிய இரண்டு தவிர்த்து நீங்கள் திடகாத்திரமான 18 வயதுக் காரராக இருந்தாலும், நோயுற்றவராக இருந்தாலும் பேலியோ பரிந்துரையை யார் செய்தாலும் புறக்கணியுங்கள். அவ்வாறு செய்ய முடியாது என்றால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பேலியோவைக் காரணமாகக் கூறவேண்டாம். அந்தப் பஞ்சாயத்தையும் எங்களிடம் கொண்டுவரவேண்டாம். அதை உங்களுக்குப் பரிந்துரைத்த அந்த போலிகளிடமே வைத்துக்கொள்ளவும். எங்களுக்கு இருக்கும் நேரத்தினை நாங்கள் சொல்வதுபடிக் கேட்டு பரிசோதனை செய்து ஒழுங்காக உணவெடுக்கும் மக்களுக்கு ஒதுக்கி சேவை செய்துவிட்டுப் போகிறோம்.

குழுவில் நியாண்டர் செல்வன் அவர்கள் துவங்கி நீங்கள் யாரிடம் நேரடியாக பேலியோ அறிவுரை வாங்கினாலும் உங்கள் ரிப்போர்ட்களை குழுவில் போட்டு டோக்கன் நம்பர் வாங்கிக்கொள்ளவும். டோக்கன் நம்பர் இல்லாமல் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப் போவதில்லை. இனி கேள்வி கேட்கும்பொழுது உங்கள் டோக்கன் எண்ணையும் குறிப்பிட்டே கேள்வியோ, சந்தேகமோ கேட்கவும். அதற்கும் முன்பாக அதற்கான பதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதா என்பதை குழுவில் உள்ள சர்ச் ஆப்ஷனைப் பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளவும். அது எப்படி என்று தெரியாவிட்டால் பேஸ்புக் தெரிந்த ஒருவரிடம் கற்றுக்கொள்ளவும். முடிந்தவரை குழுவை டெஸ்டாப்பிலோ, லாப்டாப்பிலோ திறந்து படிக்கவும். மொபைலில் பேஸ்புக்கின் பல வசதிகள் இருப்பதில்லை.

ஆக, கொங்கு மக்களுக்கும், வாட்ஸபை நம்பி பேலியோ எடுக்கும் மக்களுக்கும் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றேதான். ஒரு சித்தாந்தத்தை முழுவதும் இலவசமாக திறந்த புத்தகமாகக் கொடுத்தும் அதைப் பற்றி அக்கறையுடன் படித்தறிய நேரமில்லாது போலிகளிடம் உங்கள் ஆரோக்கியத்தை அடகுவைக்க நீங்கள் துணிந்தால் அந்த முட்டாள்தனத்திற்கும், சோம்பேறித்தனத்திற்கும் குழுவும், பேலியோ உணவுமுறையும் எந்தவகையிலும் பொறுபேற்காது என்பதோடு உங்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவறுதலாக அறியாது நீங்கள் இந்தத் தவறைச் செய்திருப்பின் உடனடியாக அவர்களை ரத்தப் பரிசோதனை செய்து முறையான அறிவுரையைப் பெற்றுக்கொள்ள உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தவறாகவும், ஏற்கனவே சுகருக்கு, பிபிக்கு மருந்து மாத்திரைகள் சரியாக எடுக்காமலும், தைராய்டு, சொரியாஸிஸ், ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி போன்ற சிகிச்சை எடுத்த பிரச்னை உடைய அன்பர்களும் குழு மூலமோ, மருத்துவ உதவி மூலமோ மட்டுமே பேலியோ முயற்சிக்கவேண்டும். ஆரோக்கியமாக இருப்பதாக நம்பும் சிக்ஸ் பேக் வைத்த அன்பராக இருந்தாலும் பேலியோவுக்கு முன் பின் ரத்தப் பரிசோதனைகள் அவசியம்.

பரிந்துரைக்கப்படும் உணவு, சப்ளிமென்ட்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் சரியாகப் பின்பற்றுவதும் அவசியம். குழு மற்றும் பேலியோ பற்றி அறிந்த மருத்துவர்கள் தவிர்த்து பேலியோவை வேறு யார் சொன்னாலும் அல்லது நீங்களே சுயமாகவும் முயற்சிக்கவேண்டாம். உங்கள் நலன் கருதி இதைச் சொல்கிறோம் என்பது தவிர்த்து இதில் வேறு எதுவும் இல்லை.

ரிப்போர்ட் போட்டால் க்ரூப்ல டயட் கிடைக்க மாசக்கணக்காகுங்க நம்ம கிட்ட வாங்க சார்ட் தர்றேன் என்பதுதான் இந்தப் போலிகளின் மிக முக்கிய தூண்டில் புத்தகக் கண்காட்சி புண்ணியத்தில் திருப்பூர் வாசியாக ஒருவாரம் ஓடிவிட்டது. தொடர்சியாக இங்கே மக்களைச் சந்தித்ததில் பல மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகளையும், மிகவும்  கவலை தரும் செய்திகளையும் கேட்டேன் / கேட்டுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அவற்றினை அனைத்து குழு மக்களுக்கும் அறிவிப்பது என் கடமை.

ரிப்போர்ட் போட்டால் க்ரூப்ல டயட் கிடைக்க மாசக்கணக்காகுங்க நம்ம கிட்ட வாங்க சார்ட் தர்றேன் என்பதுதான் இந்தப் போலிகளின் மிக முக்கிய தூண்டில் பார்முலா. அவ்வளவு பொறுமை இல்லாதவர்களுக்கும், ஒரு இன்டர்நெட் சென்டரில் 20 ரூபாய் கொடுத்து குழுவில் அப்லோட் செய்ய வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பார்முலா அருமையான ஆரோக்கிய அல்வாவைத் தரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை செய்து பேஸ்புக் பற்றி அறிந்த ஒருவரிடம் கொடுத்து உதவும்படிக் கேட்டாலே வேலை சுலபமாக முடிந்துவிடும். மூன்று நாட்களில் இதைப் பற்றி எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் தகவல்.

இதனை காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸப்பில் ஷேர் செய்து பரவலாக மக்களை சென்றடைய உதவுங்கள்.

நன்றி.. அவ்வளவு பொறுமை இல்லாதவர்களுக்கும், ஒரு இன்டர்நெட் சென்டரில் 20 ரூபாய் கொடுத்து குழுவில் அப்லோட் செய்ய வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பார்முலா அருமையான ஆரோக்கிய அல்வாவைத் தரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை செய்து பேஸ்புக் பற்றி அறிந்த ஒருவரிடம் கொடுத்து உதவும்படிக் கேட்டாலே வேலை சுலபமாக முடிந்துவிடும். மூன்று நாட்களில் இதைப் பற்றி எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் தகவல்.

இதனை காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸப்பில் ஷேர் செய்து பரவலாக மக்களை சென்றடைய உதவுங்கள்.

நன்றி.
திண்டுக்கல் சிவ குமரனின் வாட்சப் பதிவு.

22:44

பேலியோவால் உங்களுக்குள் ஒரு பிரமிட் உருவாகிறது..

பேலியோ உங்கள் நோய்களை மற்றுமில்லை, அதை உண்பதால் உங்கள் உடலில் சப் செல் அட்டாமிக் ஸ்பேஸ் சிம்பிள் ஹார்மோனிக் மோசன் தத்துவப்படி குறுகி பெருகும். அந்த மோசன் எல்லாம் சிங்க்ரனைஸ் ஆகி நம் மண்டை உச்சியில் உள்ள சகஸ்தர சக்கரம் சுழலத்துவங்குகிறது. அதன் மூலம் மெல்லதிர்வுகள் உற்பத்தியாகி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பரவுகிறது! உங்களின் அந்த வைப்ரேஷன் பெருகப்பெருக உங்களில் ஹார்மோனிக் ஃப்ரிக்வன்ஸிகளும் அதிகமாகிறது. அதன் மூலம் அந்த ஹார்மோனிக் அலைகளின் ஆம்ளிட்யூடும் வேவ் லெந்தும் அதிகமாகிறது!

இப்படித்தான் பாருங்க முதுமையில் அல்ஜிமர் வந்து நாடி நரம்பு அடங்கிப்போன பெருசு ஒருத்தர் 30 நாள் பேலியோ இருந்தார், எதிர் வூட்டு ஆன்ட்டியே ப்ரெக்னென்ட் ஆகிட்டாய்ங்கன்னா பார்த்துக்கிடுங்க!

ஒளி சில கிலோ மீட்டர்கள்தான் பரவும், ஆனால் ஒலி பல்லாயிரம் மில்லியன் மைல்களையும் கடந்து போகும். காரணம் ஒலியின் வேவ்லெந்த் அதிகமானதால்தான். பேலியோ உண்பதால் உங்களின் இந்த ஃப்ரீக்வன்ஸி & வேவ் லெந்த் அதிகப்படுத்தப்படுகிறது!

பிரமிட்களில் வைக்கப்பட்ட மம்மிகள் கெடாமல் பல்லாயிரம் கணக்கான வருடங்கள் கழித்தும் அழுகாமல் கண்டெடுக்கப்படுவதற்கு காரணமென்ன? கவர்மெண்ட்டோ, காப்பரேட்களோ அதை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள். சாதாரணமாய் காற்றில் உழளும் ஃப்ரிக்வென்ஸிகளை எல்லாம் ஒரு பிரமிட் ஒன்றாய் குவிக்கிறது! அந்த குவிக்கப்பட்ட அலைகள் எல்லாம் இறந்தவரின் செல்களை கெடாமல் காப்பாற்றுக்கிறது! பேலியோ சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள செல்கள் எல்லாம் பிரமிட்களாக வடிவம் பெறுகின்றன. அதாவது அந்த பிரமிட்களுக்குள் இருக்கும் அதே அலை அதிர்வுகள் உங்கள் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஒரு பிரமிட் உருவாகிறது. பேலியோ உண்பதால் உங்களுக்குள் பல்லாயிரம் மில்லியன் சின்ன பிரமிட்கள் உருவாகி அலை அதிவுகளை கிளப்புகிறது! அது அதிகமானால் உங்கள் வீட்டிற்கு, பக்கத்து வீட்டிற்கு, எதிர் வீட்டுக்கு வீதிக்கே கூட பரவலாம்! தர்போதைய ஆராய்ச்சிகள் அவை ஒரு வீதி முழுதும் (சில பல கிலோமீட்டர்கள்) வரை மட்டுமே பரவுவதை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நம் பஜ்னை குழு உறுப்பினர்கள் பலரும் மத்திய கிழக்கில் வசிப்பவர்கள். அவர்களின் பேலியோ அலைஅதிர்வுகள் இந்தியாவில் வசிக்கும் அவர்கள் குடும்பத்தினரால் உணர்வதாக கூறுகிறார்கள்.

அமேரிக்காவில் பண்ணையில் கோழி கழுவும் நம் பஜனை மட மூத்த உறுப்பினர் ரஷ்ய ஏவுகணைகளை தன் அலை அதிர்வுகள் தொட்டு திரும்புவதாக உறுதி படுத்தி இருக்கிறார். அதை அவரே தன் வாயால் சொன்னார்!

குப்பை உணவான சாதம் இட்லி, சேமியா உண்பதால் 9 வயதிலேயே பீரியட்ஸ் பிரச்சனை உள்ளவர்கள், சாதா 85 வயதிலேயே மோனோபாஸ் அடைந்த இளங்குமரிகள் எல்லாம் பேலியோ சாப்பிட்டு 21 வயதுக்கு பிறகுதான் எண்ணி வச்ச தேதிகளில் பீரியட்ஸ் ஆவதையும் 100 வயதில் கருத்தரிக்கப்போவதாக மூத்த பெண் உறுப்பினர்ரும் சொல்லியதை நம்ம ஏழை விவசாயிகள் டீம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையும் அதே ஏழை விவசாயிஜி அவரே தன் வாயால் சொன்னார்.

முன்பே எப்படி பேலியோ ஏய்ட்ஸுக்கு எமனாகவும், ஆட்டிஸத்துக்கு ஆப்படிக்கிறது என்பதையும் இதே டீம் விளக்கி ஒலக விஞ்ஞானிகள் மூஞ்சியில் கரியை பூசி கறி உண்டார்கள் என்பது நாம் அறிந்ததே! இதற்க்கெல்லாம் இப்போதைய இந்த சயின்டிஃபிக் பிரமிட் அலைஅதிர்வு தியரி நிரூபித்திருக்கிறது!

ஆகவே 50000 பேர் மட்டுமே உள்ள அந்த சீக்ரெட் குழுவுக்கு ஆள் பிடிக்க இப்படி செய்யவில்லை.

வாழ்க பிரமிட் வாழ்க வைப்ரேஷன்ஸ்!

உங்கள் வைப்ரேஷன்ஸ் எங்கள் சேவை!
22:01

Repeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.

பாதாம் எண்ணிக்கை 100 கிராமா? 100 நம்பரா?

பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண்ணிக்கையிலும் அது கிட்டத்தட்ட 100 பாதாம்களே வரும். அதாவது ஒரு கிராம் = ஒரு பாதாம். கூடக் குறைய இருக்கலாம் தவறில்லை.

டயட்டுக்கு முன்பாக கண்டிப்பாக உடல் பரிசோதனை, ப்ளட் டெஸ்ட் செய்யவேண்டுமா?

கண்டிப்பாக செய்துகொள்வது நல்லது, அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தெரியவரும், அதற்கேற்ப சில பொருட்களை விலக்கியும் சேர்த்தும் டயட் எடுக்க முடியும். டயட்டிற்கு பின்பும் இந்த டெஸ்ட்களை மீண்டும் எடுப்பதன் மூலம் டயட்டால் விளைந்த நன்மைகள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே தெரியவரும்.

கடைகளில் விற்கப்படும் பேலியோ பிரியாணி ரைஸ், பேலியோ பரோட்டா, பேலியோ ப்ரோட்டீன் பார், பேலியோ சர்க்கரை, பேலியோ சுகர்லெஸ் கரும்பு ஜூஸ், பேலியோ சப்பாத்தி, பேலியோ எண்ணெய் போன்றவற்றை வாங்கி உண்ணலாமா?  

கூடாது. பேலியோவில் உங்கள் உணவை நீங்களே சமைத்து உண்ணுவதே சிறப்பு. ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுகள், பேலியோ என்ற அடைமொழியுடன் கடைகளில் விற்கப்படுபவனவற்றை வாங்கி காசை வீணாக்காதீர்கள். தேவையான பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடித்தது போல சமைத்து ஆரோக்கியமாக டயட் துவங்குங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் என்ன பொருட்கள் கலந்திருக்கிறது என்று பாருங்கள், செயற்கை நிறங்கள், செயற்கை இனிப்பு, ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவைகள் இருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது உத்தமம்.

கோழி முட்டை நாட்டுக் கோழி முட்டையா? ப்ராய்லர் கோழிமுட்டையா? எது சாப்பிடுவது?

பேலியோவைப் பொறுத்தவரை தானாகவே இரை தேடி உண்ணும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே முதல் தேர்வு. முட்டையைப் பொறுத்தவரை நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் உன்னதம். கிடைக்காவிட்டால் ப்ராய்லர் கோழி முட்டைகளை சாப்பிடலாம். கவனம் நாட்டுக் கோழி முட்டை என்பது பண்ணைகளில் ஹைப்ரிட் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு, அந்தக் கோழிகள் இயற்கையாக உண்ணாத பொருட்களை தீவனமாகக் கொடுத்து உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும், கோழிகளும் விற்பனையாகிறது. இதை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட ப்ராய்லர்கோழியே வாங்கி உண்ணுவது உத்தமம்.

உங்களால் அருகாமை கிராமங்களில் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகளை, முட்டைகளை வாங்க முடியுமென்றால் உங்கள் உடல் நலத்திற்கென வாரம் ஒரு நாள் பயணம் செய்து அப்படி வளர்ப்பவர்களிடம் வாங்கிப் பயனடையலாம். உங்கள் முயற்சியையும், நேரத்தையும் பொறுத்தது அது. இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாதவர்கள், ப்ராய்லர் வாங்கி டயட்டை முன்னெடுங்கள்.

டேட்ஸ் சாப்பிடலாமா? ஓட்ஸ் சாப்பிடலாமா? பழங்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?வேர்க்கடலை, பருப்பு ஏன் தவிர்க்கவேண்டும்? பீன்ஸ் ஏன் சாப்பிடக்கூடாது? ஏன் பழங்களை ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது?

டேட்ஸ் என்பது ஒரு இனிப்பு உணவுதான், அதைச் சாப்பிட்டு இரும்புச் சத்து உடலில் சேரவேண்டுமானால் ஒவ்வொரு வேளையும் 1.5கிலோ அளவுக்குச் சாப்பிடவேண்டும், அதில் சேரும் இரும்புச் சத்தைவிட உங்களின் உடலில் சேரும் சர்க்கரை அளவுகள் அதிகம்.

பழங்களிலும் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, டயபடிஸ் இருப்பவர்கள் பழம் சாப்பிட்டால் உடனே சர்க்கரை அளவுகள் ரத்தத்தில் ஏறும். போலவே உடல் எடை குறைக்க டயட் எடுப்பவர்கள் முதல் 30  
நாட்கள் பழங்கள் தவிர்ப்பது நல்லது, இது இன்சுலினை ஏற்றும், உடல் எடை கூடும், ஏன் எடை குறையவில்லை என்று குழப்பமே மிஞ்சும்.

பருப்பு, லெகூம் வகைகளில் வரும் பீன்ஸ் வகைகளும் இயற்கையாகவே பைட்டிக் அமிலம் (Pytic Acid) என்ற தற்காப்பு விஷயத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த இயற்கை தற்காப்பு விஷயம் பருப்பு, பீன்ஸ் வகைகளை நாம் சமைத்து உண்ணும்போதும் அழியாமல் உடலில் சேர்ந்து பல உபாதைகளையும், அதனுடன் நாம் உண்ணும் பிற உணவுகளின் சத்துக்களை நம் உடலில் சேரவிடாமலும் செய்கின்றன. அதனாலேயே பாலியோவில் அவற்றுக்குத் தடை.

பேலியோவில் குதித்துவிட்டேன், நான் எப்படி சாப்பிடவேண்டும், கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டில் இருப்பவைகளுடன் கூடவே கோதுமை தோசை, தேன் தினைமாவு, ஹெர்பாலைப் பவுடர், கொள்ளு ரசம், ஓட்ஸ் அல்வா, அப்பளம், எண்ணெயில் நன்றாகப் பொரித்த சிக்கன், வெல்லம் போட்ட கடலைமிட்டாய், இன்னபிறவற்றையும் கூட சேர்த்து சாப்பிடலாமா?

கூடாது, கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை மட்டும் முதல் 30 நாட்கள் கடுமையாகக் கடைபிடிக்கவும். மேலே சொன்ன உணவுகள் யாவும் பேலியோவில் விலக்கப்பட்டவை.

நீங்கள் கொடுத்த டயட் சார்ட்டினை நானே சிறிது மாற்றி, காலையில் ஒரு காபியுடன் 5 பட்டர் பிஸ்கெட் (பட்டர் பாதாம்தானே?) அல்லது மேரி பிஸ்கெட், 100 பாதாமுக்குப் பதில் 15 பாதாம், இரண்டு இட்லி, மஞ்சள் கரு இல்லாத முட்டை, இதயத்துக்கு நலமளிக்கும் சன்ப்ளவர் ஆயிலில் செய்த மெதுவடை 1, மதியம் 1 ப்ளேட் சோறு, பீன்ஸ் பொரியல், அவரைக்காய் கூட்டு, நிறைய சன்ப்ளவர் எண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கு பொரியல், இரவு சப்பாத்தி 4, பனீர் டிக்கா, சிக்கன் 65 போன்றவைகளை சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டால் விரைவில் எடை குறையும் என்பதற்காக நானே சொந்தமாக ஜிந்திச்சி இப்படி டயட் சார்ட் எடுத்துக்கொண்டேன், இது சரியான டயட்தானா?

 வேலை மெனெக்கெட்டு டயட் சார்ட் கொடுப்பது அதை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மேலே உள்ள உணவுகளில் சூரியகாந்தி எண்ணெய், பொரித்த உணவுகள், பிஸ்கெட், சோறு, சப்பாத்தி போன்றவைகளால் உங்கள் எடை கூடும், எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 போன்றவைகளால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவுகள் கூடும் எனவே தயவுசெய்து உங்கள் ஜிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கொடுத்துள்ள டயட் சார்ட்டின்படி வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். குறைவாகச் சாப்பிடுவது, கலோரி கணக்குகள் இங்கே உதவாது. பசியுடன் இருக்கவைக்கும் எந்த டயட்டும் நல்ல டயட் இல்லை.

என் எடை 105 கிலோ, எனக்கு சர்க்கரை குறைபாடு, பிபி, தைராய்ட் எல்லாம் உண்டு, நான் பேலியோவை கடுமையாக கடைபிடித்துவிட்டு என் எடையை 75 கிலோவுக்குக் குறைத்துவிட்டு, சர்க்கரை, பிபி எல்லாம் நார்மலாக்கிவிட்டு பிறகு சாதாரணமாக நான் சாப்பிடலாமா? 

தாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் அப்படிச் சாப்பிட ஆரம்பித்த உடன் உங்கள் எடை ஏறும், சர்க்கரை, பிபி அளவுகள் கூடும், பழைய படி எடையில் செஞ்சுரி அடித்து மேல் மூச்சு வாங்க மீண்டும் பேலியோவுக்குத்தான் ஓடிவருவீர்கள்.

அப்படி என்றால் காலம் பூராவும் நான் பேலியோவைத்தான் உண்ணவேண்டுமா?

கிட்டத்தட்ட ஆமாம். காலம்பூரவும் அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, இனிப்புகள், குப்பை உணவுகள் மானாவாரியாக உள்ளே தள்ளி உடல் நிலை கெட்டபோது வராத இந்தக் கேள்வி ஏன் பேலியோவுக்கு மட்டும் வருகிறது என்பதை யோசியுங்கள். உங்களின் சாதாரண உணவுகள் உங்கள் உடலுக்கு உபாதைகள் தருகின்றன, பேலியோ உங்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகிறது என்றால் எதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உண்பீர்கள் என்பதற்கான விடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேன்டும். 

ஏன் காபி குடிக்கக்கூடாது? என்னால் காபி குடிக்கமுடியவில்லை என்றால் நான் இறந்தேவிடுவேன்.

இல்லை நீங்கள் இறக்கமாட்டீர்கள். காபி என்பது ஒரு போதைதான், இருதயத்துக்கு பலமான அதிர்ச்சி கொடுக்கும் இந்தப் பானம்தான் உங்களின் ரத்த அழுத்தத்திற்கான முழு முதல் காரணி. நீங்கள் 50 வருடம் தினம் 10 லோட்டா காபி குடிப்பவர்களாகக் கூட இருங்கள், 1 வாரம் காபி குடிக்காமல் இருந்துவிட்டால் அதன்பிறகு இப்படி ஒரு பானத்திற்காகவா உயிர்விடத் துணிந்தோம் என்று நீங்களே உங்களைப் பார்த்து கேட்கும் நிலை வரும். ஆம், காபி குடிப்பதை விட்டால் முதல் 3-4 நாட்களுக்கு தலை வலிக்கும், நன்றாக நெற்றியில் சுக்கை பாலில் அரைத்து பற்றுப் போட்டுவிட்டு கம்மென்று படுத்து விடுங்கள், 5-ம் நாள் காபி எனும் போதை உங்கள் வாழ்விலிருந்து ஒழிந்துவிடும். இது நரசுஸ் மீது ஆணை. கேவலம் ஒரு காபியைக் கூட உணவிலிருந்து ஒழிக்கமுடியாவிட்டால் நம்மால் எந்த டயட்டையும் எடுத்து உடல் நலம் பேண முடியாது.

வேறு வழியே இல்லை என்றால்..

காபிக்கு மாற்றாக புல்லட் ப்ரூப் காபி, பட்டர் டீ, க்ரீன் டீ போன்றவைகள் எடுக்கலாம். 

புல்லட் ப்ரூப் காபி செய்முறை - இங்கே.

பட்டர் டீ செய்முறை - இங்கே

பேலியோ டயட் ஆரம்பித்த உடன் எனக்கு மலச்சிக்கல் வருகிறது. வயிறு வலிக்கிறது, பேதி ஆகிறது, தலை வலிக்கிறது, சோர்வாக உணர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் உடல் கார்போஹைட்ரேட் மூலம் சக்தி கிடைப்பதிலிருந்து கொழுப்பு மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வழி மாறுவதற்கான அறிகுறிகள்தான் மேலுள்ளவை. பெரும்பாலும் ஒரு வாரத்திறகுள் இவை சரியாகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். டயட் சார்ட்படி டயட் எடுத்தாம் மட்டுமே இது பொருந்தும், உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் சரியான அளவு குடிக்காமல் விட்டாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம்.

மலச்சிக்கல் நீங்க பேலியோ காய்கறிகள், தினம் ஒரு கீரை, காலை எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர், போன்றவை உதவும். அதிக காய்கறிகள், சரியான நீர் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும். 

பேலியோ எடுத்தது முதல் தாகம் அதிகமாக இருக்கிறது, வாய் உலர்ந்து போகிறது, கண் எரிச்சலாக இருக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், கொழுப்பு சார்ந்து தானியம் தவிர்த்து டயட் எடுக்கும்பொழுது உடலில் முதலில் ஏற்படும் எடை இழப்பு என்பது தானியம் சாப்பிட்டதால் உடல் தேக்கி வைத்திருக்கும் நீர் எடையே. இந்த உடல் நீர் வற்றும்பொழுது தாகம் எடுக்கும், எனவே பேலியோவில் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். 3-4லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். வாய் உலர்ந்து போகுதல், கண் எரிச்சல் போன்றவை உடலில் கொழுப்பு எரிவதாலும் நிகழலாம் அல்லது நீங்கள் அளவு குறைவாக சாப்பிடுவதாலும் நிகழலாம்.   

பேலியோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு டயட் இல்லையா? நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன், எனக்கு பேலியோ டயட் கடைபிடிக்க முடியுமா?

முடியும். தெளிவாக இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான டயட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும். எல்லாவகை உணவுப் பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் டயட் சார்ட் தேவைப்படுவதால், விருப்பு, வெறுப்பு, மதம், கடவுள், ஜாதி இன்னபிறவற்றை உடல்நலம் காக்கும் உணவுக்குறிப்புகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.

மேலே தெளிவாக டயட் சார்ட் கொடுக்கப்பட்டும் எனக்கு எழும் சந்தேகங்கள் பின்வருமாறு:
டேட்ஸ், ஓட்ஸ், சிறு தானியங்கள், வேர்க்கடலை, முந்திரி, தேன், வெல்லம், கருப்பட்டி, ஸ்டீவியா, சுகர் ப்ரீ மாத்திரைகள், காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், வெந்தய தோசை, மசாலாதோசை, கேஎப்சி/மெக்டொனால்ட் சிக்கன், போன்ற நீங்கள் டயட் சார்ட்டில் குறிப்பிடாத உணவுகளைச் சாப்பிடலாமா?

கூடாது.

தெள்ளத் தெளிவாக இந்த பேலியோவின் அடிப்படையிலான டயட் சார்ட் என்பது ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு சார்ந்த அடிப்படையைக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. டயட் சார்ட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகச் சாப்பிடுவது, மற்ற உணவுகளைக் கலந்து சாப்பிடுவது. ஹெர்பாலைப், கொள்ளு பவுடர், மூலிகைகள், சிட்டுக்குருவி லேகியம் போன்றவைகளை சேர்த்து உண்பது என்பது கூடாது.

பேலியோ டயட் எடுக்கும்பொழூது சரக்கடிக்கலாமா? 
பேலியோ டயட் என்று இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாராயமும் சிகரெட்டும் கூடவே கூடாது. ஆண்டுக்கணக்கில் சிகரெட்டும், சரக்குமாக இருந்த நண்பர்கள் பேலியோ டயட் எடுத்தபிறகு அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு இந்தப் பழக்கங்களிலிருந்து வெளியேற விருப்பம் இருந்தால் இந்த டயட் அதற்கு உதவும். சரக்கடிக்க பேலியோ டயட்டை சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தினால் நிச்சயம் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

கூகுள் தளத்தில் பேலியோ என்று தேடினால் வரும் ரிசல்டுகளில் சொல்லப்படுபம் விஷயங்களுக்கும், இந்தக் குழுவில் சொல்லப்படும் விஷயங்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறதே?

ஆம். ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் நமது மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை பேலியோ டயட்டில் செய்திருக்கிறோம். உலகின் முழு முதல் முட்டை கூட இல்லாத சைவ பேலியோ டயட்டும் இந்தக் குழுவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் மூலம் பெறப்படும் கொழுப்புணவுதான் அதிக நன்மைகளைத் தரும் என்றாலும், பிறப்பிலிருந்தே சைவ உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு பல காரணிகளால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காக உடலுத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த சைவ டயட் தயாரிக்கப் பட்டுள்ளது.

சைவ பேலியோ, அசைவ பேலியோ எது சிறந்தது?

பேலியோ என்றாலே அசைவம்தான், மனிதன் நெருப்பே கண்டுபிடிக்காத காலத்தில் சைவத்தை விட அசைவமே அவனுக்குத் தெரிந்த பிரதான உணவாக இருந்தது. ஆக அசைவ பேலியோவே சிறந்தது, உடல் எடை குறைப்புக்கு மட்டும் என்றால் சைவ பேலியோவும், நடை பயிற்சியுமே போதுமானது. உடல் பிரச்சனைகளோடு டயட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடத் தயார் என்றால் அவர்களுக்கு பலனலளிக்கக் கூடிய டயட் பேலியோவில் கிடைக்கும். நீங்கள் பால் குடிப்பீர்கள் என்றால் முட்டையும் அதைப் போலத்தான் என்று நினைத்துக்கொள்ளவும். முடியவே முடியாத மனத்தடை என்றால் வேண்டியதில்லை, மனத்தடையோடு எந்த புதிய முயற்சியும் நன்மை தராது. 
21:59

பேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.

யார்மூலமாகவோ, எதையோ படித்து, யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம்.
உங்கள் வரவு நல்வரவாகுக.
இந்தக் பேஸ்புக் க்ரூப்பிற்குள் வந்துவிட்டீர்களே தவிர, இங்கே என்ன பேசுகிறார்கள்? இது என்ன டயட்? பேலியோ என்றால் என்ன? அதை வேகவைத்து சாப்பிடவேண்டுமா? காலை தேன் கலந்து சுடுநீரில் கலந்து சாப்பிடவேண்டுமா? சப்பாத்தியின் உள்ளே வைத்து சாப்பிடவேண்டுமா என்றெல்லாம் புரியாமல் , சரி, இது ஏதோ வேலை வெட்டி இல்லாத க்ரூப் போல இருக்கிறது, ஒரு காலை வணக்கம் இல்லை, 8 தலை நாகம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் அதிசிய வீடியோக்கள் இல்லை, பெரிய கேக் படத்தைப் போட்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லை, இந்தியா கிரிக்கெட்டில் வெற்றிபெற்றும் ஒரு பாரதமாதாகி ஜே என்ற போஸ்ட் கூட இல்லை என்று குழம்பி நீங்கள் தவிக்கிறது புரிகிறது.
நிற்க.
இது ஒரு டயட் க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.
 
இந்த டயட்டைப் புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவு, எது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள். ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காது. எனவே அனாவசியமான குழப்பங்கள், கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இந்த டயட்டின் அதிர்ச்சிகள்:
இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.
அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)
கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
பழங்கள் / ஜூஸ்.
அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
ஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள், மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
அனைத்து வகை பருப்புகள், புளி.
அனைத்துவகை சோயா பொருட்கள்.
காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.
போங்க சார், அப்புறம் என்னத்தான் சாப்பிடறது? இது என்ன டயட் க்ரூப்பா? இல்ல மோட்சத்துக்கு ஆளெடுக்கிறீங்களா? என்று நீங்கள் கதறிக் கடுப்பாகி மயக்கம் போட்டு விழப்போவதற்கு முன்பாக மேலேயும், கீழேயும் படியுங்கள்.
மேலே முதலில் என்ன சொன்னோம்?
 
||||||||| இது ஒரு டயட் க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.
 
இந்த டயட்டைப் புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவு, எது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள். ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காது. எனவே அனாவசியமான குழப்பங்கள், கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும். ||||||||||||
ஓக்கே, இப்பொழுது ஏன் சர்ப் வாங்கி அலசி காயவைத்து திறந்த மனதுடன் இந்த டயட்டை அணுகுங்கள் என்று சொன்ன காரணம் புரிந்திருக்கும். அது புரிந்தால்தான், எடை குறைப்பு என்றாலே, வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடவேண்டும், கொள்ளு வேகவைத்து சாப்பிடவேண்டும், சிறுதானியங்களை ஊறவைத்து சாப்பிடவேண்டும், குறைவாகச் சாப்பிடவேண்டும், கை கால் வீசி நடந்து, களைத்துப் போய் 4 பட்டர் பிஸ்கெட்டும், டீயும் குடித்துவிட்டு, ஆழ ஒரு தம் அடித்துவிட்டு இருப்பதே ஆரோக்கிம், ஹெர்பாலைபை குடித்துவிட்டு 5 ப்ளேட் ப்ரியாணையை அசால்ட்டாகத் தின்றால் எடை குறைந்துவிடும், 50 கிலோ மீட்டர் ஓடினால், நடந்தால், சைக்கிள் ஓட்டினால், ட்ரெட்மில்லில் ஓடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று முட்டிவலியோடு நீங்கள் நம்புவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சர்ப் போட்டு நீங்கள் சரியாக அலசாததால், சைடில் லேசாக (அப்ப அருகம்புல்லும், கற்றாழையும் போட்டு கம்மங்கூழ் குடிக்கச் சொல்றாங்களோ) என்று ஒரு கறை இருப்பதால், மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
||||||||| இது ஒரு டயட் க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.||||||
போதும்யா, போதும் அந்தக் கீரிப்புள்ளையையும், பாம்புபையும் அவுத்துவிட்டு சண்டை போடவைங்க என்று நீங்கள் நினைத்தால் ஓரளவு இந்த டயட் பற்றி அறிய நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். யெஸ், இதற்கு மேல் வரும் செய்திகளைப் படிக்காமல் போனால் உங்களுக்கு, டயபடிக், ஹார்ட் அட்டாக், உடல்பருமன் போன்ற பலவியாதிகள் வரும்.
ரைட், இனி இந்த டயட் பற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:
இங்கே பரிந்துரைக்கப்படும் உணவுகள் கீழ்வருமாறு:
கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.
யெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:
இதெல்லாம் சாப்பிட்டால் மாரடைப்பு வராதா?
டயபடிக் இருப்பவர்களுக்கு சுகர் ஏறாதா?
உயிருக்குப் பிரச்சனை இல்லையா?  
எல்லாம் போகட்டும்,
இவ்வளவு கொழுப்பு சாப்பிட்டால் எப்படி உடல் எடை குறையும்?
தமிழனின் பாரம்பரிய உணவுகளான அரிசி, கோதுமை, மேகி, பட்டர்பிஸ்கட், பிரியாணி, பரோட்டா எல்லாம் சாப்பிடக்கூடாது என்கிறீர்களே? நீங்கள் சொல்வது டயட்டா? என்ற கேள்விக்கெல்லாம் விடையை நாங்கள் ஒரு சிறிய குழந்தைக்கும் புரிவதுபோல விளக்கமாக எழுதி இருக்கிறோம். பொறுமையாக கீழே உள்ள லிங்க்குகளை வாசிக்கவும்.