ஏன் சிலருக்கு என்ன சாப்பிட்டும் ஒன்றுமே ஆகவில்லை? நமக்கு மட்டும் இவ்வளவு பிரச்சினை?
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
பல ஒல்லி பெல்லி ஆசாமிகள் மூன்று வேளையும் சதம், சப்பாத்தி, பர்கர், தோசை என ஃபுல் கட்டு கட்டுகிறார்கள். எவ்வளவு செய்தும் அவர்கள் வெயிட் கூடுவதில்லை, ஒல்லியாக ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்கள் மரபணு அப்படி.எவ்வளவு மாவுச்சத்து சாப்பிட்டாலும் இன்சுலின் அதிகரித்து அவற்றை டிஸ்போஸ் செய்கின்றன. அவர்கள் செல்கள், இன்சுலின் எதிர்ப்பு நிலை அடைவதில்லை
நம்மில் பெருவாரியான மக்கள் அப்படி இல்லை. நமக்கு அதிக மாவுச்சத்து (இட்லி/தோசை, சாதம், சப்பாத்தி) எடுத்தால் இன்சுலின் அதிகரித்து உடற்பருமன், பிரஷர், சுகர் என பல வியாதிகள் வருகிறது.
இந்த ஒல்லிபெல்லி ஆசாமிகள் விவரம் தெரியாமல் தாங்கள் எடுக்கும் உணவு தங்களைக் காக்கிறது என நினைக்கிறார்கள்(உண்மையில் அவர்கள் மரபணு அவர்களைக் காக்கிறது). அதனால் இட்லி, தோசை, சப்பாத்தி, ரைஸ் அனைவருக்கும் நல்லது என நினைக்கிறார்கள். யாராவது அதை சாப்பிட்டு குண்டானாலோ அல்லது சுகர் வந்தாலோ, "நீ சோம்பேறி, நல்லா சாப்ட்டு தூங்குற. வாக்கிங் போ" என்கிறார்கள். குண்டுபெல்லி மற்றும் சுகர் ஆசாமிகள் வாக்கிங் ஜாகிங் போயும் உடற்பருமனோ சுகரோ குறைவதில்லை. ஏனென்றால் அவர்கள் பிரச்சினை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ். மாவுச்சத்து அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
அவர்களுக்கு தீர்வு மாவுச்சத்து குறைந்த பேலியோ டயட்டே.
நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாம் ஆரம்ப நிலையிலிருந்து பிறந்து ஓட ஆரம்பிக்கிறோம். இந்த கடவுளின் இன்சுலின் சென்சிடிவ் குழந்தைகள் 80மீட்டர் ஏரியாவிலிருந்து பிறந்து ஓட ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் வெற்றி பெறுவது உறுதி. நாம் வெற்றி பெறவில்லை என்றால் நம்மை ஏசுகிறார்கள்.
இயற்கையாகன ஒல்லி பெல்லி ஆசாமிகளே. நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள். குண்டாக இருக்கும் எங்களுக்கு உங்கள் உணவு தீர்வு கிடையாது.
No comments:
Post a Comment